எடப்பாடிக்கு சைலண்ட்டாக செக் வைக்கும் சீமான் + ராமதாஸ்! மிரட்டும் "நம்பர் 15".. மொத்த அரசியலே மாறுதே
சென்னை: எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவரின் வாக்கு சதவிகிதம் 15தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் அதைவிட குறைவாக இருக்கும், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது போல இந்த கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
விமர்சனம் செய்யவில்லை: ஆனாலும் பாஜகவை எங்கும் விமர்சனம் செய்யாமல் எடப்பாடி மௌனம் காத்து வருகிறார். டெல்லி பாஜகவுடன் அன்பான உறவை கடைபிடிக்கும் விதமாக தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்து வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவரின் வாக்கு சதவிகிதம் 15தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் அதைவிட குறைவாக இருக்கும். ஓ பன்னீர்செல்வம் இருந்த போதே அவரின் வாக்கு சதவிகிதம் ஆளுக்கு 18 என்ற அளவில்தான் இருந்தது. இப்போது அவர் இல்லாமல் வாக்கு சதவிகிதம் அதைவிட மோசமாக குறையும். 15க்கும் கீழ் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் வாக்குகளை பிரிக்க போகிறார். செங்குந்தர் பறையர் வாக்குகள் சீமானுக்கு செல்லும்.

பேட்டி: வன்னியர் வாக்குகளை ராமதாஸ்தான் வெல்ல போகிறார். தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு பெரிய பலம் இல்லை. வன்னியர் இடஒதுக்கீட்டையும் கூட அவர் முழுமையாக செய்யவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கூட அவர் முயற்சி செய்யவில்லை. இதை ராமதாஸ் கையில் எடுப்பார். ஜாதிவாரி கணக்கெடுப்பை ராமதாஸ் கையில் எடுப்பார் . அப்போது எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி ஏற்படும். வன்னியர் தரப்பில் இருந்தும் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்படும்.
இதனால் ராமதாசும் வாக்குகளை பிரிக்க போகிறார். அப்படி இருப்பதால்தான் எடப்பாடி 15க்கும் கீழ் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி கண்டிப்பாக வீழ்ச்சி அடைவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி கவிழ்ந்தால் எல்லாம் முடிந்தது. அவரால் மீண்டும் எழுந்திருக்கவே முடியாது. சட்டசபை தேர்தலிலும் அவரால் எழுந்திருக்க முடியாது. ஜெயலலிதா, எம்ஜிஆர் போல அவரால் எழுந்திருக்க முடியாது. சீமானும் இதை நம்புகிறார்.
எடப்பாடி மீண்டும் வர மாட்டார். அவர் வெல்ல வாய்ப்பு இல்லை. அவரின் வாக்குகளை நாம் பிரிக்கலாம் என்பது சீமானுக்கும் தெரியும். அதை மனதில் வைத்தே அவரும் அரசியல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். சீமானும் அதைத்தான் நம்புகிறார். செங்கோட்டையன் வந்தால் கூட முக்குலத்தோர் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் எடப்பாடி மீது முக்குலத்தோருக்கு தனிப்பட்ட கோபம் உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்., என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications