லோக்சபா தேர்தலுக்கு முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. தென் சென்னை நாதக வேட்பாளர் இவர்தான்!
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை சீமான் இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதிகளை நிர்ணயிப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அப்படியே தொடரவுள்ளது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள அதிமுக, சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை கட்டமைத்து வருகிறது. பாஜக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி, முதல் கட்சியாக வேட்பாளர் அறிவிப்பையே வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி என்பவரை அறிவித்துள்ளார் சீமான்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் இன்னும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை உறுதி செய்யாமல் உள்ள நிலையில் முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்திருக்கிறார் சீமான். அடுத்தடுத்து, மற்ற தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications