ஆடியோ அரசியல்- நிறுத்துங்க என பல முறை சசிகலாவிடம் சொன்னேன்.. நாகரிகம் இல்லாமல் தொடருகிறது- சீமான்
சென்னை: ஆடியோ அரசியல் நாகரீகமானது அல்ல; அதனை நிறுத்துங்கள் என சசிகலாவிடம் எத்தனையோ முறை சொன்னேன்.. ஆனால் நாகரீகம் இல்லாமல் ஆடியோக்கள் வெளியிடப்படுவது தொடர்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியிடப்படுவதை ரசிக்கவும் இல்லை- ஏற்கவும் இல்லை. இது சரியான முறையும் அல்ல.

தலைமை பண்பு அல்ல
ஒருவரை தலைவர் என மதித்து பேசுகிறார்கள். அதனை பதிவு செய்து பொதுவெளியில், ஊடகத்தில் வெளியிடுவது என்பது தலைமை பண்புக்கானது அல்ல. அவமானகரமானதுதான்.

நேரடியாக பேசுங்க..
தொண்டர்களை அழைத்து நேரடியாக உரையாடுங்கள்.. பொது இடங்களில் ஒன்று கூட்டி பேசுங்கள்.. அதுதான் சரியான முறையாக இருக்க முடியும். இது தொடர்பாக நான் பலமுறை சசிகலாவிடம் இதுபற்றி பேசினேன்.

சசிகலாவிடம் ஆடியோ வேண்டாம் என்றேன்
ஆடியோக்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள் .. சரியானது அல்ல என சசிகலாவிடம் சொல்லிப்பார்த்தேன். ஆனால் இது தொடரத்தான் செய்கிறது.
Recommended Video

முறையான செயல் அல்ல
நான் பேசுவதைக் கூட உளவுத்துறை பதிவு செய்யும். ஆனால் பகிரங்கமாக வெளியிடாது. அப்படி பொதுவெளியில் வெளியிடுவது முறையான செயலும் அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications