சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தப்பு? நானும் அதையே பேசுறேன்.. கைது செய்துதான் பாருங்க.. சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு? பேசியதற்காக கைது செய்வீர்கள்? சாட்டை துரைமுருகன் பேசியதையே நானும் பேசுகிறேன்.. என்னை கைது செய்வீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா போட்டியிட்டுள்ளார். அவரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகனும் பங்கேற்றார்.

சாட்டை துரைமுருகன் பேசும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் சொந்த ஊருக்கு சென்ற சாட்டை துரைமுருகனை குற்றாலம் அருகே போலீசார் கைது செய்தனர்.
கொலைகளும் சாராய சாவுகளும்: இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சாட்டை துரைமுருகன் குற்றாலம் போகவில்லை. அவரது ஊரில் அடுத்த வாரம் திருவிழா. அதற்காக போனவர்தான். கள்ளச்சாராயம் விற்றவன், 31 நாட்களில் 131 கொலை நிகழ்ந்துள்ளது; தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே இது தெரிய வருது. மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து எவ்வளவு பேர் மரணம்? இதற்கு பிறகும் விக்கிரவாண்டியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் பாதிப்பு? புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? எங்க வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள்? அதை மீறி எப்படி வரும்?
பேசினால் கைதா?: கொலைகாரர்கள், சாராய ஆலை அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் கொலையை எப்படி தடுக்க முடியும்? கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்க முடியும்? இவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், கைது பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா?
என்னையை கைது செய்யுங்க பார்க்கலாம்: எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்? என்னைவிட பேசிவிட்டாரா துரைமுருகன்? அதிகாரத்தில் இருக்கிற பவர்புல் கிங்தானே நீங்க.. என்னையை கைது செய்யுங்க பார்க்கலாம்? என்னை சுற்றி இருக்கிறவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுப்பதுதானே..

பாடியது குற்றமா?: சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கே அவதூறு செய்து பேசினார்? அவர் பாடியது ஏற்கனவே இருந்த பாட்டுதானே? எழுதினவன், பாடினவனை விட்டுவிட்டு எடுத்து பாடியவரை ஏன் கைது செய்றீங்க? நானும் அதே பாட்டை இதோ பாடுகிறேன்.... இப்ப நான் பாடிட்டேன் என்னை கைது செய் பார்க்கலாம்.. நீ புள்ள பூச்சிய பிடிச்சு விளையாடுவ.. தேள், பாம்பு, நட்டுவாகளியை பிடிச்சு விளையாடேன்..
நாங்க பேசினால் அவமதிப்பா?: முன்னாள் முதல்வர் கருணாநிதியை பேசவே கூடாதா? திமுகவினர் பேசாத பேச்சா பேசுகிறோம்? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி இப்போதைய முதல்வர் ஸ்டாலின் பேசியதை எல்லாமே எடுத்து அனுப்பட்டா? நீங்க பேசுவது கருத்துரிமை; நாங்க பேசினால் அவமதிப்பா? முடிந்தால் என்னை கைது செய்யுங்களேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications