Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிட பன்றிகள் மீது உன்னி மாதிரி - பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான காங். மீது சீமான் கடும் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு நாம் தமிழர் கட்சிஉஇன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கும் வேலையை காங்கிரஸ் செய்யக் கூடாது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் வாழ்விடங்களை இடித்துவிட்டு மாட்டுக்கு ரூ25 கோடியில் மடம், கூடாரம் கட்டுவேன் என்பதெல்லாம் என்ன? எங்கே நடக்கிறது இதெல்லாம்? செங்கல்பட்டு மறைமலைநகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. இது புறம்போக்கு நிலமாக இருந்தாலும் அரசின் இடம்தானே.. வாழ வழியற்றவன் வாழ்வதற்கு அரசு இடம்தானே இருக்கிறது. அரசு இடத்தில் வீடு கட்டி வாழ்வதில் என்னதான் பிரச்சனை உங்களுக்கு? அப்படி பொதுமக்கள் வாழ்விடங்களை இடித்துவிட்டு அரசு என்னதான் செய்யப் போகிறது?

Seeman Condemns Congress to oppose to Perarivalan release

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு என்ன வேலை இருக்கிறது? சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு ஏதாவது வேலை செய்யனும்தானே? வாங்கிய ஓட்டுக்கு ஏதாவது கத்திதானே ஆக வேண்டும்? இதுவரையில் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக காங்கிரஸ் போராடி இருக்கிறதா? ஏன் காங்கிரஸ் போராடுவதில்லை.. மக்களுக்கான பிரச்சனையே காங்கிரஸ் கட்சிதான். மக்களுக்கு பிரச்சனையே பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகதான். மலைகளை மண்ணாக நொறுக்கப்படும் விவகாரத்தில் குரல் கொடுத்ததா இந்த கட்சிகள்? ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்த போது என்ன செய்தீர்கள்? சகிக்க முடியாத லஞ்ச ஊழலில் இந்த மாநிலம் திளைக்கிறதே இதற்கு எதிராக குரல் கொடுக்கிறீர்களா? நீங்கள்தான் மதவாதத்துக்கு எதிரானவர்களே.. ஹிஜாப் அணிந்துவந்ததால் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக பேசினீர்களா?

இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி என் இனமக்களை கொன்றழித்தனர். சிங்களருக்கு ஆயுதங்களை கொடுத்து என் இன மக்களை கொன்று குவித்தனர். இத்தனையையும் மறந்துவிட்டுதானே தமிழர்கள் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். அதுக்கு நன்றிக் கடன்தானா பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கிறது காங். ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு விசுவாசம் காட்டனும் நினைத்து கொண்டு பேசுகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். ஏன் வாயை மட்டும் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தனும்? மேலே மூக்கையும் சேர்த்து கட்டிக் கொண்டு போராட்டம் நடத்துங்களேன்..

உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பே எஞ்சிய 6 தமிழர் விடுதலைக்குப் போதுமானது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அதை தமிழ்நாடு அரசு முடிவு செய்ய வேண்டும். உளமாற நினைத்திருந்தால் திமுக எப்பவோ இதனை செய்திருக்கலாம். ராஜீவ் கில்லர்ஸ் என பேசிய ஜெயலலிதாதான், திருவாளர்கள் பேரறிவாளன் உள்ளிட்டோர் என சொல்லி 7 தமிழரை விடுதலை செய்ய தீர்மானம் போட்டவர். ஆனால் காங்கிரஸ் அரசுதானே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது. இப்போது பேரறிவாளன் எனும் ஒரு தனி ஒரு மகன் போராடிப் பெற்ற விடுதலை. தன் விடுதலையை பேரறிவாளனே பெற்றுக் கொண்டார். யாரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது.பேரறிவாளன் சட்டம் படித்தார். சட்ட வல்லுநர்கள் குழுவை அமைத்து போராடிப் பெற்ற விடுதலை.

டெல்லியில் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருமாதம் ஹோட்டலில் சிறை வைத்தது ராஜீவ்காந்திதான். இந்திய ராணுவ தளபதி ஒருவர் சிகரெட் துகளைப் போல நசுக்குவேன் என பிரபாகரனை மிரட்டினார். அமைதிப் படையை அனுப்பி என் மக்கள் 20,000 பேரை கொன்று குவித்தது ராஜீவின் ராணுவம். சிங்கள ராணுவத்தைவிட இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்ததுதான் அதிகம். அதை யாருமே பேசலையே ஏன்? பின்னர் மீண்டும் ராஜீவை கொன்றுவிட்டார்கள் என கூறி இலங்கையுடன் சேர்ந்து தமிழர்களை அழித்ததும் காங்கிரஸ்தான். அமைதிப்படையை அனுப்பி பிரபாகரனை ஏன் ராஜீவ் படுகொலை செய்ய சொன்னார்? ராஜீவ் காந்தி செயதது சர்வதேச பயங்கரவாதம். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை ஒசாமா பின்லேடன் தகர்த்தது சர்வதேச பயங்கரவாதம் என்கிற போது ராஜீவ் செய்ததும் சர்வதேச பயங்கரவாதமே. வாயை கிளறி வாங்கி கட்டிக் கொள்ள கூடாது. திராவிட பன்னிகள் மீது உன்னிகள் மாதிரி கடித்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சி கொண்டு ஏதோ 4 சீட், 10 சீட் வாங்கிக் கொண்டு பிழைத்து போய் வழியை பார்க்கனும். பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கும் வேலை எல்லாம் வைத்து கொள்ளக் கூடாது. இவ்வாறு சீமான் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+