“படிக்கிற கூட்டம் ஒரு பக்கம்.. கையை கடிக்கிற கூட்டம் மறுபக்கம்!” தவெகவை விளாசிய சீமான்
சென்னை: சமீபத்தில் தவெக கட்சியை சேர்ந்த ஒருவர், காவல்துறை அதிகாரியின் கையை கடித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "படிக்கிற கூட்டம் ஒருபக்கம்.. கையை கடிக்கிற கூட்டம் மறுபக்கம் கூடுது" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, "படிக்கிற கூட்டமெல்லாம் ஒரு பக்கமும், கையை கடிக்கிற கூட்டம் இன்னொரு பக்கமும் கூடுது. இதை சொன்னால் கோவித்துக்கொள்கிறார்கள். நாங்கள் அணில்கள்தானே! பழங்களை கடித்தோம், காயை கடித்தோம் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, கையை கடித்தவுடன் கோவித்துக்கொள்கிறீர்களே என கேட்கிறார்கள்.

எல்லாவற்றையும் திரை போட்டு மூடி பழக்கப்பட்டவர்கள், இப்போது நம்முடைய எழுச்சியை திரையை போட்டு மூடலாம் என்று நினைக்கிறார்கள். இது திரையை போட்டு மூடக்கூடிய குப்பை அல்ல. கனன்றுக்கொண்டிருக்கும் பெரு நெருப்பு புரட்சி தீ என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
எல்லாமே பெரியார் என்பவர்கள், எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள், எவரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். இந்த கட்சி வெற்றி பெற்று, தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில், ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்திற்கும் அடிப்படையாக இருக்கும். இங்கே, நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை, திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கி விட்டார்கள்.
வறுமை பரவலாக இருக்கிறது. இதை பயன்படுத்தி, அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்த கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன்! எனவே, வெற்றியோ, தோல்வியோ.. அது அவர்கள் தரம் பரிசு. எங்களை போல, தனித்து நின்று தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள், ஆனால் மாநாட்டுக்கு காசு கொடுத்துதான் ஆட்களை கூட்டி வருகிறார்கள்.
இப்படி இருப்பவர்கள், நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று பயப்படுகிறார்கள். எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை அழித்து சிதைத்ததற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்துகளுக்கும் இடையே தான் இங்கே போட்டியே" என்று கூறியுள்ளார்.
-
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications