Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதை மறக்கவில்லை.. ஆனால்.. 'இது' ஜனநாயக விரோதம்.. ராகுல் காந்திக்கு சீமான் சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை அவர் வகித்த பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்ட பிரசாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணையானது சமீபத்தில் முடிவந்தைது. கடந்த 23ம் தேதி தீர்ப்பும் வழங்கப்பட்டது.

தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகும் நீதிபதி கூறினார். அதேபோல உடனடி ஜாமீன் வழங்கப்படுவதாகவும் மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அதாவது தீர்ப்பு வந்த அடுத்த நாளில் மக்களவை செயலகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் எம்பி பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் என்பதுதான் அந்த அறிக்கை.

சீமான் சப்போர்ட்

சீமான் சப்போர்ட்

இது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சி தலைவர்களும், கூட்டணி அல்லாத தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அருகே கட்சியின் குருதிக்கொடை பாசறை அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது,

நாங்கள் மறக்கவில்லை

நாங்கள் மறக்கவில்லை

"காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் குடும்பமே எங்கள் இனத்தை கொன்று குவித்தது. இதை எளிதில் மறந்துவிட முடியாது. அந்த கோபமும் வலியும் இன்னமும் இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியை வீழ்த்த பதவி பறிப்பு என்பது சரியான நடைமுறை அல்ல. மக்கள் ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்கள் கொடுத்த ஒரு பதவியை இப்படி பறிப்பது ஜனநாயக படுகொலையாகும். அவதூறு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை கொடுத்தது வேடிக்கையானது. ஏனெனில் இதைவிட மோசமாக பாஜக நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மோடி கூட பேசியுள்ளார்

மோடி கூட பேசியுள்ளார்

ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடியே இதுபோன்ற பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் சாமானிய மக்களுக்கு இருக்கும் சட்டம்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. சட்டம் இவ்வளவு கறாராக பின்பற்றப்படுகிறதெனல் நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோர் மீது இதேபோல கறாராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இவ்வளவு பெரிய அரசியல் பின்னணி இருக்கும் ராகுல் காந்திக்கே இந்த நிலைமை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன ஆகும்? இனி வரும் காலங்களில் மக்களாட்சி ஜனநாயகம் என்கிற அமைப்பு இருக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

போராட்டம்

போராட்டம்

முன்னதாக இன்று காலை டெல்லியின் ராஜ்கோட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தலைமையேற்றியிருந்தார். இதில் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. ஆனால் அனுமதி மீறி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி என நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+