விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்!
சென்னை: நடிகர் விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை உடனே தெரிந்து விடும். இதுக்கு எதற்கு வாக்குப்பதிவு எந்திரங்களை 25 நாட்கள் அறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசுக்கு கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போரூரில் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடந்த தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இலங்கை படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய அரசு வெளிநடப்பு செய்ததை வெறுக்கிறேன்.

எனது கனவுக்கு தடை போட முடியாது
இது தொடர்பாக அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க அழுத்தம் கொடுக்க தவறிவிட்டது. இனிவரும் காலங்களில் இதுபோல் தப்பிப் போக முடியாது. நாங்கள் நாட்டை ஆளும் காலம் வரும்போது, இந்தியா இதுபோல் வெளிநடப்பு செய்ய முடியாது. என் பேச்சு, என் செயல்பாட்டுக்கு வேண்டுமானால் தடை போட முடியும். ஆனால் என் கனவுக்கு ஒருபோதும் தடை போட முடியாது.

தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி
தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு நாடக கம்பெனியாக செயல்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களில் பட்டனை அழுத்தினால் பதிவான வாக்குகள் எண்ணிக்கை உடனே தெரிந்து விடும். இதுக்கு எதற்கு வாக்குப்பதிவு எந்திரங்களை 25 நாட்கள் அறையில் அடைத்து வைக்க வேண்டும்.வேறு இடத்தில் வைத்து வாக்கை பதிவு செய்து வைத்து விட்டு அந்த பெட்டியை வைத்து விட்டு இந்த பெட்டியை எடுத்துச்சென்று விடுவதுபோல் தொடர்ந்து நடக்கிறது.

கல்வி வியாபாரம்
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. இரண்டு பெரிய கட்சிகளையும் மக்கள் வெறுத்து விட்டனர் என்பது இதன்மூலம் தெரிகிறது. மருத்துவம் கல்வி தண்ணீர் ஆகியவற்றை வியாபாரம் ஆக்கிவிட்டனர் அதனை அடிப்படையிலிருந்து மாற்றவேண்டும். அடித்தளத்தை சரியாக அமைத்து விடுவேன் என நான் நம்புகிறேன்.

தடுப்பூசி காரணமா?
கொரோனா தடுப்பூசி மீது அச்சம் இருந்ததால் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. கொரோனா தடுப்பூசி காரணமாக விவேக் இறக்கவில்லை என்றுதான் தெரிகிறது. நான் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரித்தவரை நடிகர் விவேக் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என்றுதான் கூறினார்கள். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்துள்ளது. ஆனால் நன்கு உடற்பயிற்சி செய்து வந்ததால் அவர் தனது உடலை பரிசோதிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் அதிகமாக வந்து வந்திருக்கலாம் என நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications