பெரியாருக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்.. பைத்தியக்காரன் கொடுத்தால் சர்டிபிகேட் செல்லாது - கி.வீரமணி
சென்னை: பெரியாருக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்; பைத்தியக்காரன் கொடுத்தால் சர்டிபிகேட் செல்லாது.. வெறிபிடித்த நாய்களுக்கு வைத்தியங்கள் தான் தேவை.. அவர்களுக்கு பதில் தேவையில்லை.. என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். மேலும் பெரியார் குறித்தும், நீதிபதிகள் நியமனம் குறித்தும் வீரமணி பேசினார்.
உயர்நீதிமன்றங்கள் - 'உயர்ஜாதி நீதிமன்றங்களா'?'' என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும் என்பதை விளக்கவும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் சமூகநீதி ஆர்ப்பாட்ம் ஜனவரி 9ம் தேதியான நேற்று சென்னையிலும், மதுரையிலும் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து அறவழியில் கவன ஈர்ப்பாக நடத்த உள்ளதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி ஏற்கனவே அறிவித்திருந்தது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக போராட்டம் நடைபெறவில்லை என்றும் உரிய சமூகநீதி கிடைக்கவே கோரிக்கைப் போராட்டமாக இந்த சட்ட உரிமைப் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.'

கி வீரமணி அறிவித்தபடி சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது. அதில் வீரமணி பேசும் போது, நீதிபதிகள் நியமனம் குறித்து விரிவாக பேசினார். அதேபோல் பெரியார் குறித்தும் வழக்கறிஞர்கள் குறித்து பேசினார். அப்படியே சீமானின் பேச்சுக்கும் பதிலடி கொடுத்தார். அப்போது வீரமணி பேசுகையில், "பெரியார் பகுத்தறிவுவாதியா என்று இப்போது சில பைத்தியக்காரர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். பெரியார் யார் என்பதை அறிய உனக்கு முதலில் பகுத்தறிவு இருக்க வேண்டும்..
பைத்தியம் பிடிச்சவன் பகுத்தறிவு பற்றி பேசக்கூடாது.. பைத்தியம் பிடிச்சவனுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களை மாதிரி உள்ளவர்களுக்கு கிடையாது. பைத்தியம் பிடித்தவனுக்கு செய்ய வேண்டியது வைத்தியமே. வெறிநாய் கடித்தால், சிகிச்சை தான் கொடுக்க வேண்டும்.. வெறிநாயுடன் போட்டி போட முடியுமா? அதைவிட முக்கியம் நீதிபதி துறை... திருடப்பார்க்கிறார்கள். வேறு ஆள் வந்து உட்கார பார்க்கிறார்கள்.. இந்த கவனத்தை திருப்பிவிட நீ என்னென்னமோ முயற்சி செய்கிறாய்.. அதை திருப்பிவிட அந்த பக்கம் பேசிக்கொண்டு போகிறாய்... எங்களை திசை திருப்ப முடியாது. நாங்கள் பெரியாரிடம் படித்தவர்கள்.. பெரியார் தந்த புத்தி எங்கள் புத்தி..
பெரியாரிடம் போய் ஒருவர் பொதுஉடைமை, பொதுஉடைமை என்று சொல்கிறீர்களே.. உங்கள் மனைவி நாகம்மையை அனுப்புவீர்களா என்று கேட்டார். அதற்கு பெரியார் அதை நாகம்மையிடம் போய் கேள் என்று பதில் அளித்தார். இன்றைக்கு பெரியார் குறித்து ஒருவர் பேசுகிறார்'. அவர் சர்டிபிகேட் யாருகேட்டா... அந்த சர்ப்டிபிகேட் வாங்கினால் செல்லுமா... செல்லாது.. அவன் தன்னை இருக்கிறோம் என்று காட்ட வருகிறான்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications