"ரத்தம்".. நைசாக தெரியாம கலந்துட்டாரு! சீமான் மீது வீரலட்சுமி ஷாக் புகார்! பெரிதான விஜயலட்சுமி கேஸ்
சென்னை: சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வைத்து இருக்கும் புகாரில் புதிய கோணம் ஒன்றை வீரலட்சுமி குறிப்பிட்டு காட்டி உள்ளார். இதனால் விஜயலட்சுமி வழக்கு தீவிரம் அடையுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். அதில், முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
மகனாய் இருப்பேன் என்ற சீமான்: விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது.
மன அழுத்தம்: அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடமும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன்.
என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.
7 முறை கரு: சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் எம்மை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டாயபடுத்தியும் நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் எமக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எமக்கு கருச்சிதைவு செய்தார்.
இதனால் என்னுடைய உடலும் உள்ளமும் பலவீனம் ஆனது. நலிவுற்று போனது. எங்கள் குடும்பம் இதனால் நிம்மதி இழந்தாது. நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகைகளை பணங்களை, சுமார் 60,00,000/- லட்சம் பணமும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சிறுக,சிறுக என்னிடம் பெற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் நான் பணம் கொடுக்க மறுக்கவே மது அருந்திவிட்டு என்னை துன்புறுத்தி அடித்துவிட்டு பணத்தை பிடுங்கி செல்வார். ஒரு நாள் நான் சீமான் அவர்களுக்கு மதிய உணவை நான் சமைத்து வளசரவாக்கம் கட்சி அலுவலகத்தில் கொண்டு செல்வேன், அவர் சாப்பிட்ட பிறகு 45 நிமிடம் வரை அவரோடு இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வது தினந்தோறும் பழக்கம். மேலும் சீமான் அவர்களின் Ford-காரில் பிறகு சீமானின் இதை பற்றி கேட்ட பொழுது அவர் மழுப்பலாக உண்மைக்கு மாறான தகவலை பேசினார் என்னிடம் சண்டையிட்டு அடித்தார்., என்றெல்லாம் கூறி உள்ளார்.
புதிய கோணம்: : சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வைத்து இருக்கும் புகாரில் புதிய கோணம் ஒன்றை வீரலட்சுமி குறிப்பிட்டு காட்டி உள்ளார். இதனால் விஜயலட்சுமி வழக்கு தீவிரம் அடையுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி செய்துள்ள புகாரில், நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை சீமான் கருச்சிதைவு செய்துள்ளார். வீட்டிலேயே உணவில் மருந்து கலந்து கொடுத்து இப்படி செய்துள்ளார். மாதவிடாய் வரவில்லை என்றால் இப்படி சீமான் செய்துள்ளார். இதை எல்லாம் விஜயலட்சுமிக்கு தெரியாமல் செய்துள்ளார்.
தேதி தள்ளிப்போனால் இப்படி உணவில் மருந்து கொடுத்துள்ளார். இது போன்ற சமயங்களில் விஜயலட்சுமிக்கு அடிக்கடி அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. இதை செய்ததற்கு மருத்துவமனை ஆதாரங்கள் உள்ளன. இதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
சீமான் செய்தது கொலை. அவர் முறையாக கருக்கலைப்பு செய்யவில்லை. அவர் செய்தது கருச்சிதைவு. அவர் செய்தது குற்றம். ஒருவர் அனுமதியோடு, மருத்துவமனையில் செய்தால் மட்டுமே அது கருக்கலைப்பு. இது கொலை. சீமான் செய்ததற்கு கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். எங்களிடம் இதற்கு ஆதாரம் உள்ளது. ஒருமுறை கருக்கலைப்பு செய்தால், உடலுறவு மேற்கொண்டால் அதற்கு ஆதாரம் காட்ட முடியும். இங்கே ஏழு முறை நடந்துள்ளது. இதை நாங்கள் போலீசிடம் சொல்லி இருக்கிறோம், என்று வீரலட்சுமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications