மெரினாவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம்.. சட்டப் போராட்டம் நடத்துவேன்.. சீமான் திட்டவட்டம்
சென்னை: மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடுக்கடலில் ரூ 81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு ஒரு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு நடத்தியது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மீனவ அமைப்புகளும் கலந்து கொண்டனர். இதில் பேனா சின்னத்திற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்த போது அவரை பேச விடாமல் திமுகவினர் கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் பேனா சின்னத்தை கடலில் அமைக்கக் கூடாது. அதை சுற்றுலா தலமாக்கும் போது எதையாவது சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை தண்ணீரில் போட்டால் கடல் வாழ் உயிரினங்களின் உயிருக்கே ஆபத்து என தெரிவித்திருந்தார். அதையும் மீறி பேனா சின்னம் அமைத்தால் அதை உடைப்பேன் என சீமான் சீறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப் பணித் துறை கடிதம் அனுப்பியது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித் துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ட்வீட்டை முதல்வர் அலுவலகம், மு.க.ஸ்டாலின், அமைச்சர் எஸ் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆட்சியர் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களுக்கும் ஷேர் செய்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications