சங்கத் தமிழ் இலக்கியங்களை 'திராவிடக் களஞ்சியம்' என தொகுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கடும் எதிர்ப்பு
சென்னை: சங்கத் தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என தொகுக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: சங்கத் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என அடையாளம் மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கு எதிரான மிகப் பெரும் மோசடித்தனமாகும்.

மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்தாளப்பட்ட திராவிடம் என்பதைக் கொண்டு ஆரியத்துக்கு நேரெதிராக தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ் மொழியையும் தமிழ்ப் பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கு எதிராக கருத்தியல் பரப்புரையும் அரசியல் போரும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தமிழின் தொன்மக் களஞ்சியங்களும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத திராவிடம் எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களை குறிப்பிடும் திராவிட திருட்டுத்தனம் வெட்கக் கேடானது!
ஆகவே சங்கத் தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாக கைவிட்டு அவற்றை தமிழ்க் களஞ்சியம் என்றே குறிக்க வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications