பீகாரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு.. தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கொடுப்பார்கள்.. சீமான் கணிப்பு!
சென்னை: பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்ததை போல், தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்பு உள்ளதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.15 ஆயிரம் கொடுக்கலாம் என்று கூறிய சீமான், நமது பெண்களிடம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள்ள சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. பீகார் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக, கடைசி நேரத்தில் மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தது அமைந்தது. அதாவது தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்பாக சுமார் 1.5 கோடி மகளிருக்கு ரூ.10 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக போடப்பட்டது.

இதனால் பெருவாரியான மகளிர் வாக்குகளை என்டிஏ கூட்டணி அறுவடை செய்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு பின் பாஜக தனது பார்வையை தமிழ்நாடு பக்கம் திருப்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தொடர்ந்து பேசி வருகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் SIR பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளால் எத்தனை லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடப் போகிறது என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், தமிழ்நாட்டில் பல காலமாக போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது மட்டும் போலி வாக்காளர்கள் இருப்பது போல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுவது ஏன்? பீகாரை போல் தமிழ்நாட்டிலும் தங்களுக்கு வாக்காளிக்காத நபர்களின் பெயர்களை நீக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற்பரையும் என் படமோ, தம்பி விஜய்யின் படமோ இருந்தால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்கு வாக்கு இருக்காது. அதனை எளிதாக நீக்கிவிடுவார்கள்.
SIR பணிகளுக்காக பாஜக செல்லும் போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வீட்டில் அவர்களுக்கு வாக்கு இருக்குமா? அதேபோல் பீகார் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன் மோடி மகளிரின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் போட்டார் இல்லையா.. அதுபோல் தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் போடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
அதனால் நமது வீட்டில் உள்ள பெண்களிடம் வங்கியில் கணக்கு தொடங்க சொல்ல வேண்டும். பீகார் ஃபார்முலாவை பின்பற்றி அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க வேண்டியது தானே.. ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடனாக்கிவிட்டு செல்ல வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications