“மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம்.. ஆளுநருக்கு எப்படி இருக்கும்?” - சீமான்
சென்னை: "பல கோடி மக்கள் வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்திருக்கிறார்கள். இத்தனை கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம், ஆளுநருக்கு இருப்பது எப்படி?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "ஆளுநர் யாருன்னு உங்களுக்கு தெரியும். அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ் உறுப்பினர். எப்பவுமே ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள், எந்த மாநிலத்தில் அதற்கு அதிகாரத்தில் இல்லையோ அங்க அவங்க ஆட்களை போட்டு, எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் மக்களால் தடுப்பார்கள்.

தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமிக்கப்பட்ட ஒற்றை நபருக்கு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், அவர் கையெழுத்து போட்டா தான் செல்லும் என்றால் இது மக்களாட்சி ஜனநாயகம்னு எப்படி நம்புறது? இத்தனை கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வருது? இது எப்படி மக்களாட்சி என்று ஏற்பது? புதுச்சேரியில் ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற விடவில்லை கிரண்பேடி. தன்னிச்சையாகவே இவர்களாக ஆய்வு செய்ய கிளம்பிவிடுவது, இவர்களாக எல்லாவற்றையும் செய்வது, இதெல்லாம் கொடுமை" என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆந்திர காட்டுக்குள்ள 20 தமிழர்களை இதே சந்திரபாபு நாயுடு தலைமையிலான போலீஸ்தான் சுட்டு கொன்றது. நாங்க வறுமையின் காரணமா அந்த செம்மர கட்டையை வெட்ட வந்தோம்ங்கறதுதான் இதற்கான காரணம். நாங்க வெட்டும்போது சான்றுகளோடு பிடிக்கல. நாங்கள் எந்த பன்னாட்டு கார்ப்பரேட்டின் கைக்கூலிகள் கிடையாது. பக்கத்து மாநிலத்தில் இருக்கிற சாதாரண மக்கள். மனச்சான்றோடு எல்லாரும் பாருங்க. எங்களை கைது பண்ணி சிறை பண்ணலாம். நாங்க வழக்காடி உயிரோட வெளியில வரலாம். ஆனா எதுக்காக சுட்டு உடைய எல்லாம் கழற்றிவிட்டு, விறகு கட்டையில ஒரு எண்ணு, எங்க கால்லயும் ஒரு எண்ணை போட்டு வைக்கனும்? மரக்கட்டையும் தமிழன் உயிரும் ஒன்னுன்னா?
மரக்கட்டையும் மனித உயிரும் ஒண்ணான்னு இந்த நாட்டுல யாராவது ஒருவர் கேட்டிருக்கிறாரா? உயிர்களை பலி கொடுத்த குடும்பத்துக்கு இந்த நாடு கொடுத்த காசு எவ்வளவு? பசிக்காத தானே பிழைக்கப் போனேன். வெட்ட வந்த கூலி என் மாநிலத்தில் இருந்தான் வந்தவன். வெட்டி ஏத்துன முதலாளி எங்கடா இருந்தான்னு கேட்டிருக்கணுமா இல்லையா? அவன் மேல ஏன் நீ வழக்கு போடல? அவனை ஏன் கைது செய்யல?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications