ஒரு முடிவோடு சீமான்.. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்.. காவிரிக்காக வீடியோ வெளியிட்டு அழைப்பு
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சீமான் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக இருந்து வருகிறது. காவிரி விவகாரம் இரண்டு மாநிலங்களிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது.

அதேபோல், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ( ஞாயிற்றுக் கிழமை) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! காவிரி நதிநீர் நம் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்! நாம் தமிழர்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications