நேத்து ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சு! சாதி பார்த்து சீட் கொடுக்கும் சீமான்? தடுமாறும் தம்பிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இம்முறை வேட்பாளர் தேர்வில் புதிய வியூகம் வகுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த வியூகம் கட்சிக்குள் கலகக் குரல்களை எழுப்பியிருக்கிறது. பாதிக்குப் பாதி பெண்கள், பிரமாணர்களுக்கு வாய்ப்பு என முழங்கினாலும், பல தொகுதிகளில் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி (நாதக) தனது தேர்தல் வியூகங்களை தெளிவாக அமைத்து அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே 2026 சட்டமன்ற தேர்தல் தனித்துத் தான் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் அந்தக் கட்சி, தற்போது வேட்பாளர் தேர்விலும் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, வரும் தேர்தலில் பல முக்கிய மாற்றங்களை செய்ய நாம் தமிழர் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.

Seeman NTK Caste

சீமான்

சீமான் அரசியலுக்கு வந்தது முதல், "சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும்", "அனைவருக்கும் சம வாய்ப்பு" என்ற கருத்தை வலியுறுத்தி வருபவர். கடந்த தேர்தல்களில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு அளித்ததும், பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியதும் இவரது அரசியல் நடைமுறைக்கு வித்தியாசமான அடையாளமாக இருந்தது. ஆனால் இம்முறை, அவர் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் விதம் நாதகத்துக்குள் புதிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி

சாதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது மற்ற கட்சிகளின் வழக்கம். எந்த தொகுதியில் எந்தச் சமூகத்தினர் அதிகம் உள்ளனர் என்பதை கணக்கிட்டு அங்கே அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்துவார்கள். இதுவரை அதைத் தவிர்த்தவர் சீமான். ஆனால் இப்போது அதே உத்தியை அவர் பின்பற்ற ஆரம்பித்திருப்பது தான் வேதனைக்குரியது என கூறுகின்றனர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள். உதாரணமாக, திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் தொகுதியைக் கைகாட்டுகின்றனர்.

சாதி அரசியல்

அங்கு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தினால் தான் வெற்றி பெறலாம் என்ற கருத்து மற்ற கட்சிகளில் நிலவுகிறது. ஆனால் அந்த தொகுதியில் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். ஆனால் இம்முறை சீமான், அதே திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷை வேட்பாளராக அறிவித்துள்ளார். அவரை முன்னிறுத்தும் விதமாக மருது சகோதரர் விழாவையும் திருவெறும்பூரில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் தேர்வு

இதனால், "அடிப்படை மாற்றம் தான் எங்கள் நோக்கம்" என்று கூறி வந்த சீமான் இப்போது அதற்கே எதிராக நடந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் எழுந்துள்ளது. மேலும், வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினருக்காக 5 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கும்பகோணம் அல்லது மயிலாப்பூர் போன்ற சில தொகுதிகளில் மட்டுமே பிராமண வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நாதக வியூகம்

ஆனால், இம்முறை மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 4 தொகுதிகளில், குறிப்பாக அவற்றில் நான்கு பேர் பெண்கள் போட்டியிடும் வகையில் பிராமண வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகள், தமிழக அரசியலில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+