இது தக் லைஃப் படத்தின் பிரச்னை இல்லை.. இனத்தின் பிரச்னை.. வருமானத்தை விட இனமானம் முக்கியம்: சீமான்
சென்னை: தமிழில் இருந்து கன்னடம் சென்றது என்று நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கன்னட அமைப்புகள் தொடங்கி நீதிமன்றம் வரை கமலை கேள்வி எழுப்பி வருகிறார்கள். கமலுக்கு ஆதரவாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிபதி தீர்ப்புதான் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
தக் லைஃப் பட விழாவில் கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு வருகிறார்கள். தக் லைஃப் படம் வருகிற 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமல் மன்னிப்பு கேட்காவிடின் தக் லைஃப் படத்தை வெளியிட முடியாது என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அந்த மாநில உயர் நீதிமன்றமும் கன்னட அமைப்புகளின் கருத்தை ஆதரித்து கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கமல்ஹாசன் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
கமலுக்கு ஆதரவாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "கமல் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு சான்றுகளுடன், ஆய்வுகளுடன், கன்னடம் இந்த வருடத்தில் இப்படி உருவானது என்று பதில் சொல்ல வேண்டும். எங்கள் அண்ணனை மன்னிப்புக் கேட்க சொல்லி நீதிபதி சொல்கிறார். நீதிபதி தீர்ப்பு தான் சொல்ல வேண்டும். அவர் நாட்டாமை போல அமர்ந்து பஞ்சாயத்து பேசக் கூடாது.
அது நீதிபதியின் வேலை கிடையாது. நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசும் கருத்துக்கு நேர் எதிராக இவ்வளவு தீவிரம் காட்டுகிறீர்கள். இல்லையென்றால், கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை. இது தனித்து தோன்றியது அல்லது வேறு மொழியில் இருந்து வந்தது என்று நீதிபதி சான்று அடிப்படையில் ஒரு தீர்ப்பு சொல்லட்டும். அதுதானே அவரின் வேலை. மிரட்டுவது அவர்களின் வேலை கிடையாது.
அதை விடுத்து மன்னிப்பு என்பது எப்படி சரியாகும். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இது தனிப்பட்ட கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் விஷயம் கிடையாது. உலகிலேயே மூத்த 50,000 வருடம் தொன்மைமையான தமிழர் என்ற தேசிய இனத்தின் அவமானமாக போய்விடும். அதனால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வரலாற்றில் இருந்து தான் பேசியுள்ளார்.
முன்னோர்கள் பேசியதைத்தான் அவர் பேசியிருக்கிறார். எந்த மொழி ஆய்வறிக்கையும் அதை மறுக்க முடியாது. இந்திய மொழிகளில் தமிழ் தான் தொன்மையானது. அதனால் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று காயிதே மில்லத் வாதிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், 'தமிழ் தான் உலகில் தொன்மையானது. இந்திய மொழியின் தொன்மையை தமிழில் தெரிந்து கொள்ளலாம்.' என்று பெருமையாக பேசுகிறார்.
எதற்கெடுத்தாலும் படத்தை ஓட விடாமல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதேபோல தம்பி விஜய்யின் மெர்சல் படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ், தமிழன் என்றாலே ஒரு அறுவறுப்பு உள்ளது. அதைத்தான் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்கள். இங்கு கேஜிஎப், காந்தாரா எல்லாம் ஓடி பல கோடி ரூபாய் வருமானம் கொடுத்தது. அவர்களுக்கு சிறு இடையூறு சென்றதா.
அந்த மாண்பும், மரியாதையும் உங்களுக்கு ஏன் இல்லை. இதில் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக் குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் எங்கள் அண்ணன் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்காதது சரி தான். அவர் மன்னிப்பு கேட்க கூடாது. கர்நாடகாவில் ஓடினால் எவ்வளவு வருமானம் கிடைக்குமோ, அதைவிட உலகளவில் உள்ள தமிழர்கள் படத்துக்கு வருவாய் அளிப்பார்கள்.
இது படத்தின் பிரச்னை இல்லை. இனத்தின் பிரச்னை. வருமானத்தை விட இனமானம் முக்கியம். அதை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நீங்கள் வேண்டுமானால் வரலாற்று பூர்வமாக, ஆய்வு பூர்வமாக தமிழ் மொழிக்கும், கன்னட மொழிக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்றார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications