Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரன், அண்ணி, என் மகள் மட்டும் பத்திரமாக இருக்காங்க என்பது இழிவுபடுத்துவதாகும்: சீமான் காட்டம்

பிரபாகரனை சிறுமைப்படுத்துவத்தும் வகையில்தான் அவர் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுகிறது என்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் மட்டும் வெளிநாட்டில் பாதுகாப்பாக பதுங்கி இருப்பதாக சொல்வது பிரபாகரனையே இழிவுபடுத்துவதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கமாக பேசியுள்ளார்.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பிரபாகரன் தொடர்பாக சீமான் கூறியதாவது:

பிரபாகரன் குறித்த பழ.நெடுமாறனின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் கடந்து போவதுதான் சரியாக இருக்கும். அதையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எங்க அண்ணன் (பிரபாகரன்), எங்க அய்யாவுக்கு நன்றாக தெரியும். பிரபாகரன் தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குப் போகிற ஆள் கிடையாது. கடைசிவரை வீரமாக நின்று சண்டை செய்து செத்தாலும் சாவாரே ஒழிய வேற நாட்டுக்குப் போகமாட்டார்.. அவருக்கு தெரியும். இப்படி வேறு நாட்டில் எங்க அண்ணன் உயிருடன் இருப்பதாக சொல்வது அவரை சிறுமைப்படுத்துவதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

Seeman says not accept Nedumarans claim on Prabhakaran is Alive

தன்னை நம்பி தாயகத்தின் விடுதலைக்காக தம் பிள்ளைகளை சாகக் கொடுத்த எண்ணற்ற மாவீரர்களின் குடும்பங்கள் இன்னமும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எங்க அண்ணன், அண்ணி, என் மகள் மட்டும் பத்திரமாக ஒரு நாட்டில் இருக்காங்க என்பது அவரை ரொம்ப இழிவுபடுத்துவதாகும். அந்த பெற்றோர் எங்க அண்ணனை என்னவாக கருதுவாங்க? அதை நீங்க ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

தன் மகன், 11-வயது பாலகனை என் தம்பி பாலச்சந்திரனை போ மக்களோடு மக்களாக என சொல்லும் போது நம்ம ஆட்கள், பிரபாகரன் மகன் என காட்டிக் கொடுத்துவிட்டனர். அதனால் சிங்களர் சுட்டுவிட்டார்கள். அந்த மாதிரி சூழலில் இத்தனை ஆயிரம் மாவீரர்கள் ஈகம் செய்திருக்கிறார்கள். வீரச் சாவை தழுவி இருக்கின்றனர். இறுதிப் போரில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் செத்திருக்கிறார்கள்.

Seeman says not accept Nedumarans claim on Prabhakaran is Alive

சரணடைந்த மக்களை 10,000 பேரை ஒரே வாரத்தில் கோத்தபாய முடித்துவிட்டார். செத்துப் போய்விட்டார்கள். அவர்கள் எப்படி செத்தார்கள் என பன்னாட்டு சமூகமும் இந்திய பெருநாடும் கேட்கவில்லை. அவர்களில் 59 பேர் குழந்தைகள். இன்று வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரி சூழலில் எல்லோரையும் விட்டுவிட்டு தன்னுடைய உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு பிரபாகரன் ஒருநாட்டில் பதுங்கி வாழ்கிற கோழை அல்ல. பிரபாகரன் ஆகச் சிறந்தவர். அடிப்படையில் பேரன்புக்காரர். அதுதான் அவருக்கான கோபத்தின் அடிப்படை. என் இனத்தைத் தொட்டுப் பாருங்கள்.. என் கோபம் தெரியும் என்பார் எங்க அண்ணன் பிரபாகரன்.

பிரபாகரனை தொடக்க காலத்தில் சந்தித்தவர் பழ.நெடுமாறன். அப்படியானால் பிரபாகரனை கடைசியாக சந்தித்தது நான். நான் என்ன சொல்வது? எங்க அண்ணன் இருக்கிறார். சரி வரட்டும். எங்க அண்ணன் இருந்தால் கூட அதை ஏன் சொல்லனும்?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்த பின் ஈழத்தில் நொடிக்கு நொடி ராணுவ வண்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. அங்கே பிள்ளைகள் பெரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.எதுவுமே இல்லாத போதே இந்த நாடு தடையை நீக்க மாட்டேன் என்கிறார்கள். இந்தியா எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனில் 13-வது சட்ட திருத்தம் போன்றவற்றை ஒத்திவைத்துவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அதைவிட நீ எனக்கு செய்யக் கூடிய உதவி வேறு ஒன்றும் இல்லை.

Seeman says not accept Nedumarans claim on Prabhakaran is Alive

இந்த தடை இருப்பதால் ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல.. என் போன்றோருக்கும் நெருக்கடி இருக்கிறது. எனக்கும் கடவுச்சீட்டு முடக்கம் இருக்கிறது. தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என கட்டமைத்து வைக்க காரணம் இந்த தடை. மூத்த தொல்குடி தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை. அதை முதலில் நீக்க வேண்டும். இங்கே நீண்டகாலமாக வாழும் ஈழத் தமிழ் பிள்ளைகளுக்கு இந்திய குடியுரிமை கொடுங்கள்.. அப்போதுதான் இந்தியா மீது நம்பிக்கை வரும்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் நாம் தமிழர் கட்சி எதையெல்லாம் பேசுகிறதே அதையே பாஜக செய்கிறது. ஈழத் தமிழர் மீது உங்களுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை? உங்களுக்கு அப்படி அக்கறை இருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு.. அப்புறம் போய் சட்ட திருத்தம் பற்றி பேசு. அந்த 13-வது சட்ட திருத்தம்தான் இத்தனை பேரழிவுக்குமே காரணம். அதை தூக்கிக் கொண்டு நிற்கிறது பாஜக. இவ்வாறு சீமான் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+