சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தயாளு அம்மாள் எனக்கு அம்மா.. ராஜாத்தி அம்மாவும்தான்! பாஜக நயினார் எனக்கு மாமா.. நான் மாப்ளே.. சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை நான் மாமா என்றுதான் அழைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மனித உறவு வேறு, ஆட்சியை எதிர்ப்பது வேறு. நான் தயாளு அம்மாவையும் ராஜாத்தி அம்மாளையும் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். நிர்வாக சீர்கேட்டை எதிர்ப்பது வேறு ஆட்சி முறையை எதிர்ப்பது வேறு. கோட்பாடுகளை எதிர்ப்பது வேறு. கோட்பாட்டை எதிர்ப்பது வேறு, உறவு வேறு.

இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. காங்கிரஸ் கட்சியை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஆனால் திருச்சி வேலுச்சாமி எனக்கு மாமாதானே! திருநாவுக்கரசையும் மாமா என்றுதான் அழைப்பேன்.

இறுதி கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல்.. லீக் ஆனது கிளைமாக்ஸ் கதை.. கடைசியில் இப்படி ஒரு முடிவா? இறுதி கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல்.. லீக் ஆனது கிளைமாக்ஸ் கதை.. கடைசியில் இப்படி ஒரு முடிவா?

பாஜக

பாஜக

பாஜகவில் இருக்கிறாரே நயினார் நாகேந்திரன், என்னை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிடுவார். நான் மாமா என்றுதான் அவரை அழைப்பேன். அதற்காக பாஜகவை எதிர்ப்பதை நிறுத்திவிடுவோமா என்ன? அதெல்லாம் கிடையாது. தமிழ் தேசிய அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் நடப்பது அண்ணன் தம்பி சண்டை, பங்காளி சண்டை.

பாஜகவை விட மாட்டோம்

பாஜகவை விட மாட்டோம்

அதுக்காக பாரதிய ஜனதாவை எப்படி உள்ளே விட முடியும்? உனக்கு இங்க என்ன வேலை? இங்கு இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் தங்கள் பொது கூட்ட மேடைகளில் திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சீமானும் திமுகவை கடுமையாக எதிர்த்து கருத்துகளை முன் வைத்து வந்தார்.

திமுக மீதான விமர்சனம்

திமுக மீதான விமர்சனம்

இந்த நிலையில் அண்மைக்காலமாக திமுக மீதான விமர்சனத்தை சீமான் குறைத்துக் கொண்டார். ஒரு பேட்டியில் சீமான் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலினையே என் அண்ணனை போல்தான் பார்க்கிறேன். நான் அவரை விமர்சிப்பது கூட அண்ணன், தம்பி சண்டைதான். அவர் மீது உள்ளது செல்லக் கோபம்தான். அதற்கான பொது எதிரியான பாஜகவை உள்ளே விட முடியாது என கூறியிருந்தார்.

கூட்டணி அமைக்க போகிறாரா சீமான்?

கூட்டணி அமைக்க போகிறாரா சீமான்?

இவரது இந்த திடீர் நிலைப்பாட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சீமான் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட போதிலிருந்தே அக்கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. கூட்டணி அமைக்கவில்லை. சொற்ப அளவிலான வாக்குகளை எடுத்தாலும் கூட தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டிலும் சீமான் இத்தனை ஆண்டுகளாக உறுதியாக இருந்திருக்கிறார். தற்போது அவருடைய பேச்சின் திடீர் மாற்றம் என்பது கூட்டணிக்கான அச்சாரமா இல்லை யதார்த்த பேச்சா என்பது இனிதான் தெரியவரும்.

English summary
Naam Tamilar Party Organiser Seeman says that he calls BJP MLA Nainar Nagendran as Uncle (Mama).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X