Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஞ்சு - நெஞ்சு - நஞ்சு.. சீமான் நறுக்குனு "அதை" கேட்டதுமே.. படக்குனு பார்த்த திமுக, காங்கிரஸ், பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு ரத்து விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. திமுக இந்த விஷயத்தில் மிக தீவிரமாக களமிறங்கிய நிலையில், சீமானும் களத்தில் குதித்துள்ளார்.

கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அழுத்தம் தந்து வருகிறது.

Seeman slams BJP and Do you know what Seeman criticized Congress DMK on NEET exam issue

இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. நேற்று முன்தினம், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.. அப்போது உதயநிதியின் பேச்சில், 2 விஷயங்கள் பரவலாக கவனிக்கப்பட்டது.

முதலாவதாக, நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்காக அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.. "பாஜக கூட்டணியில் இருந்ததால் முன்பு வரமுடியவில்லை.. ஆனால், இப்போது கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டீர்கள்.. தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள்" என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

இரண்டாவதாக, பாஜகவுக்கு எச்சரிக்கையே விடுத்துள்ளார்.. நீட் தேர்வு விஷயத்தில், தொடர்ந்து ஒன்றிய அரசு அலட்சியம் செய்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தைபோல், மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.. எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும் பாஜகவால், தமிழர்களின் இதயத்தை தொடவே முடியாது என்று சீறியிருந்தார். அத்துடன், கையில் கோழிமுட்டையை எடுத்துக்காட்டி, பாஜகவுக்கு எரிச்சலை கூட்டியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், இதே நீட் விவகாரம் குறித்து, நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இன்றுகூட, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆலோசனைத்தில் பங்கேற்றிருந்த சீமான், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "இங்கே தமிழ்நாட்டில் மருத்துவர்களின் தரம் சரியாகத்தான் இருக்கிறது.. ஆனால், மருத்துவ கட்டமைப்புகளை சரியாக செய்யவில்லை. காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு என்பதே கொண்டு வரப்பட்டது.. அதை இப்போது பாஜக பிடித்துக்கொண்டது.

நீட் என்பது எப்படி சரியான மருத்துவரை உருவாக்கும் என்று கேட்டால், அதுக்கு மட்டும் இங்கே பதிலே இல்லை.. அமெரிக்காவிலுள்ள ப்ரோ மெட்ரிக் என்கிற தனியார் நிறுவனம் நீட் தேர்வை ஏன் நடத்துகிறது? இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்கி தரணும் என்று அந்த தனியார் நிறுவனத்துக்கு என்ன வேண்டுதலா? உன்னால ஒரு தேர்வைகூட ஒழுங்கா நடத்த முடியலையே? அப்பறம் எதுக்காக இந்த முறையை கொண்டு வந்திருக்கே?

எனவே, நீட் தேர்வால் தரமான மாணவர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது தொடர்பாக, அண்ணாமலையுடன் நான் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்..

ஜனநாயக துரோகம்: ஆனால், இதெல்லாம் திமுகவும், பாஜகவும் சேர்ந்து நடத்தி வரும் நாடகம்.. நீட்டை கொண்டு வரும்போது அதிக கட்டணம் இருக்காது என்று பாஜக சொன்னது.. ஆனால், இப்போது பணம் கட்டி மாணவர்கள் படிக்கவில்லையா? கிராமத்தில் இருக்கும் ஒரு மாணவனும், நகரத்தில் நீட் பயிற்சி பெறும் மாணவனும் ஒரே தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு பெரிய ஜனநாயக துரோகம்?

சோர்வு மனநிலை: கல்வி கட்டமைப்பில் தென் கொரியாதான் முதலிடத்தில் உள்ளது.. அந்த நாட்டில் 8 வயதில்தான் முதல் வகுப்பிலேயே கொண்டுபோய் சேர்க்கிறார்கள்.. ஆனால் இங்கே 8 வயதிலேயே பொதுத்தேர்வு எழுத சொல்றீங்க..

பிளஸ் 1, பிளஸ்2 , நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, 3ம் வகுப்பு, 5ம்வகுப்பு, 8ம் வகுப்பு பிள்ளைகளை பொதுத்தேர்வுக்குள் கொண்டு வந்தாலி, கல்வி குறித்த வெறுப்பை ஏற்படுத்திவிடும். பிஞ்சு நெஞ்சுக்குள் நஞ்சு பாய்ந்துவிடும்.. அதனால இந்த முறையே ரொம்ப தப்பு.

தேர்வு எங்கே: மருத்துவராக வேண்டும் என்றால், அதற்கு தேர்வு எழுதணும்.. நீதிபதிக்கு தேர்வு எழுதணும்.. வழக்கறிஞராக தேர்வு எழுதணும்.. ஆட்சியர், காவல் துறை அதிகாரி ஆகவேண்டுமானால் அதற்கும் தேர்வு எழுதணும்.. ஆனால், இவர்களையெல்லாம் கட்டுப்படுத்துகிற ஆட்சியாளர்களாகிய முதல்வர், பிரதமர் இவங்கெல்லாம் என்ன தேர்வு எழுதுகிறார்கள்? அப்படின்னா, ஆட்சிக்கு வரக்கூடியவர்களுக்கு எந்த தகுதியும் தேவையில்லையா? எந்த தேர்வும் தேவையில்லையா?

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு மருத்துவமனையின் டீன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் எந்த மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும், எந்த கல்லூரிக்கு பேராசிரியராக செல்ல வேண்டும் என்பதை, நான்தான் தீர்மானிப்பேன்... நான் படிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. தேர்வுகள் எழுதவில்லையானாலும் பரவாயில்லை என்ற இயல்பு சரியா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சீமான்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தமிழக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், திமுகவை போலவே, நாம் தமிழர் கட்சியும் களமிறங்கியிருப்பதால், நீட் விவகாரத்தில் "அரசியல் நெடி" சற்று அதிகமாகவே வீச துவங்கியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+