நான் பாலியல் குற்றவாளியா? கையை பிடிச்சு இழுத்தேனா? காங். ஜோதிமணி எம்.பி.யிடம் கேட்கும் சீமான்
சென்னை: தம்மை பாலியல் குற்றவாளி என சொல்லும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியிடம் எந்த இடத்தில் நான் அவரது கையை பிடித்து இழுத்தேன்? நான் எங்கே அவரை கூப்பிட்டேன் என செய்தியாளர்கள் கேள்வி கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Recommended Video
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடுமையான கோபத்தை காட்டி வருகிறார் சீமான். காங்கிரஸ் கட்சியினரும் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்; போலீசில் புகார் கொடுத்தனர்.

ராஜீவ் மீது விமர்சனம்
ஆனாலும் இந்த விவகாரம் ஓயவில்லை. இலங்கைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப் படையை அனுப்பியது, 20,000 ஈழத் தமிழரை படுகொலை செய்தது உள்ளிட்டவைகளால் ராஜீவ் காந்தியே சர்வதேச பயங்கரவாதி எனவும் சீமான் சீற்றத்துடன் கேட்டி கொடுத்து வருகிறார்.

பாலியல் குற்றவாளி சீமான்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜோதிமணி தமது ட்விட்டர் பக்கத்தில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என கூறியிருந்தார்.

ஜோதிமணி மீது அட்டாக்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி கேட்டனர். இதற்கு சீமான் தெரிவித்த பதில்: நீங்க அவர்கிட்ட கேட்கனும்... எந்த இடத்தில் உன் கையை புடிச்சு இழுத்தார்? எங்கே உன்னை கூப்பிட்டார்னு நீங்க கேட்க வேண்டியதுதானே.. நான் பாலியல் குற்றம் செய்த போது பக்கத்தில் இருந்து நீ பார்த்தியா? எதையாவது பேசிகிட்டு இருக்கக் கூடாது.

ராஜீவ்தான் பாலியல் குற்றவாளி
பாலியல் குற்றவாளின்னு யார் சொல்வது? உங்களை எதாவது நான் தொல்லை செய்தேனா? தங்கச்சின்னு சொல்றதை தவிர மறுவார்த்தை பேசியிருப்பேனா? எதுக்கு நீங்க இந்த மாதிரி பேசிகிட்டு அலையுறீங்க.. நான் எடுத்து வைக்கிற அரசியலுக்கு நின்னு நீ சரியான பெண்மகளாக இருந்தா பதில் சொல்லனும். நீ எல்லாம் பாராளுமன்ற உறுப்பினரா? உன்னை மானங்கெட்டுப் போய் ஓட்டு போட்டோம் பாரு.. பாலியல் குற்றவாளி யாரு? ராஜீவ் காந்திதான். பல்லாயிரக்கணக்கில் என் அக்கா தங்கையை வன்புணர்வு செய்து கொலை செய்ய வெச்ச பாவி ராஜீவ் காந்தி.. என் வாயை கிளறாமல் போகனும் நீங்க... நாங்க உண்மைகளை சொன்னால் நீங்க நடமாட முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications