"லூசாயிடுவீங்க".. ஹார்ட் பேஷன்ட்னுகூட பாக்கலயே..ஈசிஜி இயல்பா இல்லையாமே, நாங்களும்தான்: சீமான் சுருக்
சென்னை: செந்தில்பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்பதால்தானே, ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க.. அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்? அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு இப்போது எதுக்கு சோதனை? அப்படின்னா இவ்வளவு நாட்கள் என்ன செய்துட்டு இருந்தீங்க" என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி சீமான்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணத்துக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.. பிறகு ஆஞ்சியோ சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இது திமுக தரப்பினரை கடுமையான கொந்தளிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதன் சுருக்கம் இதுதான்:
நெஞ்சுவலி: "அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு நிறைய கள்ளச்சாராயம் வந்துவிட்டது. கைது என்றாலே அரசியல்வாதிகளுக்கு நெஞ்சுவலி வந்துவிடும்... எத்தனை தெலுங்கு படத்தில் இந்த சீனை பார்த்திருப்போம்... நெஞ்சு வலின்னு படுத்துக்குவார்கள்.. ஆஸ்பத்திரியில் நர்ஸ், மருத்துவரை கரெக்ட் செய்துவிட்டு அங்கேயே சரக்கு அடிப்பார்கள்... தமிழ் சினிமாவில் இந்த மாதிரி நாடகம் போட்டவர்கள் எத்தனை பேரை விஜயகாந்த் ஆஸ்பத்திரிலேயே கைது செய்திருப்பார்...

செந்தில் பாலாஜியின் ஈசிஜி இயல்பு நிலையில் இல்லை என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அந்த செந்தில் பாலாஜியால் நாட்டு மக்கள் இரண்டு வருடங்களாக இயல்பு நிலையில் இல்லை.. அடிக்கடி கரன்ட் கட் ஆகுவதால் மின்சாரம் இயல்பு நிலையில் இல்லாததை போல சரக்கு அடிப்பவர்களும் இயல்பு நிலைக்கு இல்லை...
விவாதங்கள்: இப்போது செந்தில் பாலாஜி ஏமாற்றிய வழக்கு மற்றும் அவர் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.. இனி ஒரு 30 நாட்களுக்கு செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்துதான் எல்லா செய்தி சேனல்களிலும் விவாதம் செய்யப்படும்... நாமளே கடுப்பாகி, "சரி நாங்க மறந்துட்டோம் வேற ஏதாவது பேசுங்கப்பா" என்று சொல்லணும்..
தயவு செய்து செய்தி சேனல்களை பார்க்காதீங்க. அப்புறம் நீங்கள் லூசு ஆகிடுவீங்க.. லூசு ஆகிடுவீங்க.. தயவுசெய்து தொலைக்காட்சியை பார்க்காதீங்க.. செய்தியை பாரத்தாலும், சுவற்றுல முட்டிக்கிட்டு பைத்தியம் ஆகிவீங்க. நீங்களும் ஆஸ்பத்திரியில் படுத்துக்குவீங்க.
செந்தில்பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்பதால்தானே, ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க.. அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்? அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனை நடத்துறாங்களாம்.. ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனைக்கு போயிருக்கிறார்கள்.. அப்படின்னா இவ்வளவு நாட்கள் என்ன செய்தீங்க?
ஓட்டு போடறோம்: தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.. அப்படின்னா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்துங்கள் பாஜகவுக்கு நாங்கள் ஓட்டு போடுகிறோம்" என்றார் சீமான்.
தொடர்ந்து சீமான் பேசும்போது, "தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அப்படி எனில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்துங்கள்.. நாங்க பாஜகவுக்கு ஓட்டு போடுகிறோம்... காங்கிரசும், பாஜகவும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதற்காக வேண்டும்? ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுங்க பார்க்கலாம்? அப்படி ஏதாவது காரணம் இருந்தால், நான் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் அல்லது பாஜகவில் போய் சேர்ந்துவிடுகிறேன்.
காங்கிரஸ் இனத்தின் எதிரி... பாஜக மனித குலத்தின் எதிரி... கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். இப்போது கொடுக்கும் இலவச கல்வி தரம் இல்லை. குமரியை சேர்ந்த அமைச்சரின் மகன் அரசு கல்லூரியில் படிப்பாரா?
நாட்டை நாசமாக்கும் அணு உலை, அனல் மின் உற்பத்தியை அரசு கையில் வைத்துள்ளது. கல்வி, உயிர்காக்கும் மருத்துவம், தண்ணீர் ஆகியவற்றை தனியார் விற்கிறது. ஆனால் சாராயத்தை அரசு விற்கிறது. சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால் நிறைய பேர் சாராயம் குடிக்கிறார்கள்" என்றார் சீமான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications