"சக்கரம் சுத்துது".. இப்பவும் சொல்றேன், நீ வெச்சால் உடைப்பேன்.. அந்த பயம் இருக்கட்டும் தம்பி: சீமான்
"சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது.. ஆனால், தமிழக அரசு எடுத்த இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம்பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம்: இந்த திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் இது கட்டப்படும்போது சுமார் 32 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் என்றும் அந்த பொதுநல வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது... இந்த திட்டத்துக்காக, கடலில், 92 ஆயிரத்து 43 சதுர அடி பரப்பு பயன்படுத்தப்பட உள்ள நிலையில், கடலோர மண்டல மேலாண்மைக்கான தேசிய ஆணைய உத்தரவுப்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஜனவரி 31ல் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான திமுகவினர் அன்றைய தினம் கூடியிருந்தனர்.
அறிவாலயம்: இந்த கூட்டத்துக்கு சீமானும் வரப்போவதாக சொல்லியிருந்ததால், நாம் தமிழர் கட்சியினரும் திரளாக அப்போது வந்திருந்தனர். பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசும்போது, கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்.. அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பாங்களாம்.
காசு எங்கே உனக்கு: சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? பேனா நினைவு சின்னம் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதை ஏற்கிறோம். கடலில் வைக்கக் கூடாது. நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று சீறியிருந்தார் சீமான்.
ஹேஷ்டேக்: சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் கருத்தை தெரிவித்திருந்தனர்.. பேனாவை உடைக்கும்வரை எங்கள் கைகள் அதுவரை பூப்பறிக்குமா? சீமானுக்கு மட்டும் தான் கை இருக்கா? எங்களுக்கெல்லாம் கைகள் இல்லையா? என்று அமைச்சர் சேகர்பாபு உட்பட பலரும் ஆவேசமாக பதிலடி தந்திருந்தனர்.. ஆனால், கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பான விஷயத்தில், சோஷியல் மீடியாவை சரியாக கையாளவில்லை என்றும் திமுக தரப்பு அப்போது நினைத்ததாம்.. "பேனா நினைவு சின்னம் வேணாம்" என்று ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு விஷயம் போய்விட்டதை அவர்களே எதிர்பார்க்கவில்லையாம்..
வாய்ப்பூட்டு: இது திமுக தரப்புக்கே லேசான அதிர்ச்சி தான் என்றார்கள். அதனால்தான், பேனா விவகாரத்தை கொஞ்ச நாள் ஆறப்போட நினைப்பதாகவும், இனி பேனா விஷயம் தொடர்பாக யாரும் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்... மீடியாக்களிலும் இதை பற்றி பேசவேண்டாம் என்று வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் அந்த சமயத்தில் செய்திகள் கசிந்தன.. எனினும், சீமான் பேச்சின் வீரியம் குறையாமலேயே இருந்தது.. அதனால், சீமானுக்கு காட்டமாக பதிலடி தரும் வகையில் திமுக தரப்பில் "துணிவு" படத்தின் போஸ்டர் போலவே, சில போஸ்டர்களை ஒட்டி, சீமானுக்கு கண்டனத்தையும் திமுக பதிவு செய்திருந்தது..
முரட்டு பக்தர்கள்: அதில், "கலைஞரின் முரட்டு பக்தர்கள் உயிர் இருக்கும் வரை உனக்கு பேனாவை உடைக்க "துணிவு" இருக்கா? நாம் தமிழர் என்று சொல்பவன் எல்லாம் தமிழன் இல்லை. தமிழின தலைவர் கலைஞரை போற்ற தெரிந்தவர்களே உண்மையான நம் தமிழர்கள் என்று அந்த போஸ்டரில் பதிவிடப்பட்டிருந்தது.. இந்த போஸ்டர் கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஜெ.எம்.பஷீர் என்பவர் பெயரால் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.. இந்த போஸ்டரை பார்த்து நாம் தமிழர் கட்சியினர் கடுப்பானார்கள்.. இதற்கு பிறகு, ஈரோடு இடைத்தேர்தல் வந்துவிடவும், இந்த சலசலப்புகள் குறைந்திருந்தன. இப்போது மறுபடியும் பேனா விவகாரம் தலைதூக்கி உள்ளது.. மறுபடியும் சீமான் கொந்தளித்து வருகிறார்..
நேற்றைய தினம் சீமான் ஒரு நிகழ்ச்சியில் போது, "கடலை கடலாக வைத்திருக்காங்க? வள்ளுவர் சிலையை இதனுடன் ஏன் ஒப்பிடறாங்க? வள்ளுவர் சிலையை இயற்கையாக அமைந்த பாறை மீது வைத்தார்கள்.. ஆனா இதுக்கு அப்படியில்லை.. நீ அரை ஏக்கரில் செயற்கையாக ஒரு பாறையை உருவாக்கணும்.. கற்களை கொண்டு போய் கொட்டணும்.. மண்ணை கொட்டணும்.. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் என்னாவது? உலகத்துல யாருமே எழுதாததை அப்படியென்ன அந்த பேனா எழுதிடுச்சு? 134 பேனா வெச்சு அதில யார் எழுதறது?
ஆகப்பெரும் அறிவாளிகள் கிட்ட நாம மாட்டிக்கிட்டு படற பாடு இருக்கே.. காது வழியே மூளை வழியுது.. அதை துடைக்க ஆள் இல்லாம அலையறாங்க.. பெரிய சிக்கல் இது.. அன்னைக்கு இந்த கடல்சார் பிரச்சனையைதான் சொல்ல போனேன்.. ஆனால், பேசாதேன்னு சொல்றாங்க.. நான் யாரு? எப்பேர்ப்பட்டவரின் மகன் என்றுகூட தெரியாமல் சொல்றாங்க.. "போடா.. லட்சம் துப்பாக்கியை கடந்து போனவன் நான்.. உனக்கென்ன பிரச்சனை" என்றேன்..

உடனே "சரி, பேசுங்க, பேசுங்க"ன்னு சொல்றாங்க.. அந்த பயம் இருக்கட்டும் உனக்கு.. இப்பவும் சொல்றேன், நீ பேனா வெச்சால், நான் உடைப்பேன்.. கீழே இருக்கிற சக்கரம் மேலே போகும், மேலே இருக்கிற சக்கரம் கீழே வரும்.. இன்னைக்கு மேலே இருக்கிற நீ, ஒருநாள் கீழே போவே தம்பி.. கீழேயிருக்கிற நான் ஒருநாள் மேலே போவேன் தம்பி.. அப்பறம் நீ என்ன ஆவேன்னு நினைச்சு பாரு தம்பி.. பார்த்துக்கோ தம்பி.. டோட்டலி எல்லாருக்கும் சிறப்பு முகாம்தான்.. ஸ்பெஷல் கேம்ப்.. அதுல ஒரு மாற்றமும் கிடையாது.. கடல் கடலாக இருக்கணும்.. குப்பை மேடு கிடையாது அது" என்றார் சீமான்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications