கப்சா அடிச்சு விட வேண்டியது.. மேடையில் முதல்வர் ஸ்டாலின் போலவே ‘மிமிக்ரி’ செய்த சீமான்!
சென்னை: திராவிடம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசியதை அவரைப் போலவே 'மிமிக்ரி' செய்து ஆர்ப்பாட்டத்தில் பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீரை பெற்றுத்தராத திமுக அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், காவிரி நீரை பங்கிட்டுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸும், பாஜகவும் மாநில கட்சிகளாக செயல்படுகின்றன. காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு உண்மையாக இருக்க அம்மாநில ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று முதலமைச்சரான ஸ்டாலின் அப்படி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை" என விமர்சித்தார்.
மேலும் பேசிய சீமான், "இந்திரா காந்தி காலத்தில் காவிரியில் இருந்து 340 டி.எம்.சி தண்ணீர் பெற்றுக்கொண்டிருந்த நாம், 40 டி.எம்.சி தண்ணீரைப் பெற போராடிக் கொண்டிருக்கிறோம். இங்கே இருக்கும் காங்கிரஸ், பாஜக வாயைத் திறக்காது. ஏனெனில் நாம் மானம் கெட்டுப்போய் திரிகிறோம். கச்சத்தீவை மீட்டால் என்ன? காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன? மீத்தேன் ஈத்தேன் எடுத்தால் என்ன? நாம் ஓட்டைப் போட்டு விடுவோம் என்ற நம்பிக்கை.

நமக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆள்கிறது. அந்த காங்கிரஸ் கட்சியோடு நாம் கூட்டணி வைத்துக்கொண்டு போனால் இந்த தேர்தலில் தமிழர்கள் நம்மை தோற்கடித்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால் இந்த காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவாரா இல்லையா? அவருக்கு அச்சமில்லை. ஏன்? 500 ரூபாய் கொடுத்தால் போதும், ஓட்டு வந்துவிடும். ரொம்ப கோபமாக இருந்தால் கூடுதலாக ஒரு 500."என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது போன்ற மாடுலேஷனில் திராவிடம் பற்றி பேசினார். "திராவிடம் என்று பேசினாலே சிலருக்கு வயிறு எரிகிறது, திராவிடம் என்றால் இடத்தைக் குறித்தது, பிறகு மொழியைக் குறித்தது. ஒரு இனத்தைக் குறித்தது, இப்போது ஒரு அரசியல் சொல்லாக மாறியிருக்கிறது. திராவிடம் என்றால் எல்லோருக்கும் எல்லாம்" என்று பேசுகிறார். திராவிடம் என்றைக்கு ஒரு மொழியைக் குறித்தது? என்றைக்கு ஒரு இனத்தைக் குறித்தது? என்னத்தையாது கப்சா அடிச்சி விடுவது" என விமர்சித்துள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications