'நான் Sketch போட்டா..' ஆவேசமான வீரலட்சுமி.. 'நான் கேடு கெட்ட ரவுடிப்பய..' அலறவிட்ட சீமான்
சென்னை: இந்த மூஞ்சிக்கு இவ்வளவு போதும்னு குறைவாக காசை கொடுத்துவிட்டேன்.. அந்த கோபத்தில் வந்து கத்திக்கொண்டிருக்கிறது என வீரலட்சுமிக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். '
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியின் ஸ்கெட்ச் பேட்டிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இருவரும் பேசிய விஷயங்களை பார்ப்போம்.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களிடம் பேசும் போது." சும்மா இந்த உதார் எல்லாம் விட்டுக்கொண்டிருக்கக்கூடாது.. சில்லறை பசங்களை வச்சுகிட்டு மிரட்டக்கூடாது.. இது அரசியல் களம்..கருத்தியல் என்றால் கருத்தியல் ரீதியாக மோத வேண்டும்.. கருத்தியல் ரீதியாக மோதினால் நானும் அப்படித்தான் மோதுவேன். நீங்க வதந்தி பரப்புனீங்க அப்படீன்னா நானும் வதந்தி பரப்புவேன்..

ஆனால் அந்த மாதிரியான சில்லறைத்தனமான வேலைகளை என் கட்சி ஆட்கள் யாரும் பார்க்க மாட்டார்கள். நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.. தேவையில்லாமல் வன்முறையில் ஈடுபடாதீங்க.. நீங்க வன்முறையில் ஈடுபட்டீங்கன்னா, என்னை பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் களத்துல இறங்குனே? நான் இன்னும் பிளான் பண்ணல..பிளான் பண்ணி ஸ்கெட்ச் பண்ணி இறங்குனேன்.. நாம் தமிழர் கட்சி காலி இந்த தமிழ்நாட்டுல" என்று வீரலட்சுமி கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து சீமான் பேசுகையில், "வீரலட்சுமி யாரு.. அந்த அம்மா சொல்லுது..ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு ஒரு கோடி கொடுத்து செட்டில் பண்ணியதாக கூறியது. ஜூனியர் ஆர்டிஸ்ட் யார் தெரியுமா? வீரலட்சுமி தான்..எதுக்கு இவ்வளவு கோபம். அன்றைக்கு செட்டில் பண்ணும் போது. இந்த மூஞ்சிக்கு இவ்வளவு போதும்னு குறைவாக காசை கொடுத்துவிட்டேன்.. அந்த கோபத்தில் வந்து கத்திக்கொண்டிருக்கிறது. நான் யாருன்னு நினைச்சிகிட்டு எல்லாருமே பேசிக்கொண்டிருக்கீங்க.. ஒரு யூடியூப்ல அவன் என்கிறாய். இவன் என்கிறாய்..
நான் ஜனநாயக வாதியாக இருப்பது தான் உங்களுக்கு பிரச்சனை.. இந்த முகத்தையே பார்க்க முடியலையே.. எனக்கு வேற முகம் இருக்கு.. நான் கேடு கெட்ட ரவுடிப்பய.. ஆனால் அடக்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு ஜனநாயகவாதியாக இருக்கிறேன்.. பிள்ளைகளை பலியிட நான் தயாராக இல்லை.. அதனால வழக்கு.. உள்ளே போய்விட்டால்.. எப்ப வருவாங்க அப்படீன்னு குழந்தைங்க கேட்பாங்களேன்னு அமைதியாக இருக்கேன்.. நீ யாரு முதல்ல.. என் கட்ட விரல் ..க்கு கூட வரமாட்டா.. யாரு நீ.. ஸ்கெட்ச் போட்டுறுவேன் என்கிறாய்.. ஸ்கெட்ச் பென்சில் தூக்குவியா நீ.. தம்பி சிரிக்க சிரிக்க பேசுறேன்னு நினைக்காத..சீரியஸான ஆள் நான் " என்று சீமான் கூறினார்.
மேலும் சீமான் பேசும் போது, "நடிகை விஜயலட்சுமி என் கூட படத்துல நடிச்சிருக்காங்க... புகார் சொல்றாங்க.. வீரலட்சுமி யாரு? வீரலட்சுமிக்கு இதுல என்ன வேலை? அவங்க வாய்க்கு வந்ததை பேசிகிட்டே இருக்காங்க? நீ யாரு முதலில்? நீ சொல்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் சான்று இருக்குமான்னு நீங்களும் கேட்கலை? காவல்துறையும் கேட்கலை? ஒரு நாள் என் ஆளு அடிச்சுட்டான்.. சட்டம் ஒழுங்கை கெடுத்துட்டான் சீமான்னு சொல்லுவியா? வீரலட்சுமி யாரு?" என்று காட்டமாக தெரிவித்தார்.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியின் ஸ்கெட்ச் பேட்டிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் #சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இருவரும் பேசிய விஷயங்களை பார்ப்போம். #seeman pic.twitter.com/iNwsXsjbZ1
— velmurugan (@velmurugantheni) September 15, 2023
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications