Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரந்தூர் விமான நிலையம் - மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்... சீமான் கடும் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் போராட்டம்

பரந்தூர் போராட்டம்

பரந்தூர் பகுதி மக்களின் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பரந்தூரில் போராடிய பொதுமக்களை நேரில் சென்றும் சந்தித்தனர். ஆனாலும் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைவது உறுதி என அரசு தரப்பு தெரிவித்து வந்தது. இது தொடர்பாக போராடிய பொதுமக்களுடன் அரசு தரப்பில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரந்தூர் போராட்டம் சற்று ஓய்ந்திருந்தது.

அன்னூர் போராட்டத்தால் எதிர்வினை

அன்னூர் போராட்டத்தால் எதிர்வினை

இந்நிலையில் கோவை அன்னூரில் டிட்கோ தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அன்னூரில் விளைநிலம் கையகப்படுத்தமாட்டாது என அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அன்னூருக்கு ஒரு நியாயம்? பரந்தூருக்கு ஒரு நியாயமா? என பரந்தூர் பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பாதயாத்திரை செல்லவும் அப்பகுதி மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதால் இப்போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

 சீமான் கண்டனம்

சீமான் கண்டனம்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகும்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக அரசுக்கு கோரிக்கை

மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்தி நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதே எதேச்சதிகாரத்தினைக் காட்டும் நிலையில், அதனை எதிர்த்து மக்களாட்சி உரிமைக்கொண்டுப் போராடுபவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும். அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா? எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+