கொடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு-எடப்பாடி பழனிசாமி மீது சீமான் 'ஒருமையில்’ திடீர் பாய்ச்சல்!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவன் யார்? என அதிமுகவுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக திடீரென கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் தம்மை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்திருந்தார். அத்துடன் கடந்த கால அதிமுக ஆட்சியில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை; அதிமுக அரசுதான் சீமானை பாதுகாத்தது எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், தொடர்ந்து என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று மட்டுமே விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அத்துடன் அதே பேட்டியில் அதிமுக, கொடநாடு கொலை, கொள்ளை குறித்தும் காட்டமாக விமர்சித்திருந்தார் சீமான்.
கொடநாடு வழக்கு: கொடநாடு கொலை, கொள்ளை குறித்து சீமான் நேற்று கூறியதாவது: கொடநாட்டில் கொலை நடந்தது உண்மையா? இல்லையா? நீங்கதான் பத்திரிகையாளர்கள் சொல்லனும். 6 பேர் செத்திருக்கான். கொன்னது யார்? செத்தது ஏன்? ஏன் கொன்னாங்க? எதற்காக செத்தாங்க? அதை பேசனும்தானே..
"பெருந்தகை" யாரு?: ஒருநாடு.. ஒரு முதலமைச்சர் இருக்கிற வீட்டில் போய் கொலை செய்திருக்காங்க.. அதை பற்றி பேசவே இல்லை. அப்புறம் நீங்க நானும் எம்மாத்திரம்? கொடநாட்டில் ஒரு நொடி கூட மின்சாரம் அணையாது. ஏனெனில் கொடநாடு எஸ்டேட்டுக்கு தனித் தடம், தனி மின்விநியோகப் பாதை. அந்த இடத்தில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை அணைத்த "பெருந்தகை" யாரு? இதை எல்லாம் கேள்வி கேட்கனும்ல..
துப்பாக்கி முனையில் மிரட்டல்: ஒரு நேர்மையாளன் என்றால் எதற்கும் பயப்படக் கூடாது. வந்தா வா.. வராட்டி போ.. உண்மை உண்மைதான்னு பேசனும். எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பார் விவேகானந்தர். ஓட்டுநர் கனகராஜின் சகோதரரை போலீசார் மிரட்டி உள்ளனர். உண்மையை சொல்லாதே என துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியிருக்கின்றனர்.
எடப்பாடி பணமா?: 2 மாதத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே.. முதலமைச்சர் கையில்தானே காவல்துறை இருக்கிறது. இப்போது இரண்டரை ஆண்டுகளாகிவிட்டதே.. ஏன் செய்யலை? அப்ப நீங்க எடப்பாடிகிட்ட பணம் வாங்கி இருக்கனும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? எங்கிருந்து உத்தரவு வந்தது? அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? சட்டப்படி என்ன தண்டனை? அம்மா அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து 6,7 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
சுட சொன்னவன் யாரு?: யாருடா உன்னை சுட சொல்லி உத்தரவு கொடுத்தவன்? மனு கொடுக்க வந்தவனை யார் சுட சொன்னது? கலவரம் நடந்துச்சுன்னு உன்னை முடிவு செய்ய சொன்னது யார்? எடுத்த உடனே துப்பாக்கிச் சூடு நடத்த சொன்னது யார்? உண்மை வெளியே வரனும்ல.. அநியாயத்தை எதிர்த்து போராடுனா சுட்டுக் கொல்வீங்க?. இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications