அதிமுகவுக்கு இருக்கும் தைரியம் திமுகவுக்கு இருக்கா?.. வாண்டட்டாக வம்பிழுத்த நாம் தமிழர் சீமான்
சென்னை: பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதை போல் காவிரி பிரச்சினைக்காக காங்கிரஸுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் தைரியம் திமுகவுக்கு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது: அதிமுக பாஜக கூட்டணி முறிவு என ஜெயக்குமார் தெரிவித்த போதே அந்த முடிவை வரவேற்று வாழ்த்தினேன்.

எந்த மத்தியக் கட்சிகளுடனும் கூட்டணி கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. என் மொழி, வழிபாடு, உரிமைகளை காக்க தேசிய கட்சிகள் எப்போதும் வராது. ஒரு தொங்கு தசை போல பாஜகவை தூக்கி சுமக்க வேண்டிய அவசியமில்லை. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால் அவருடைய இறப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அதிகாரத்தில் இருந்ததால் தடுமாறியிருக்கலாம். இப்போதாவது இந்த முடிவு எடுத்ததற்கு பாராட்டுகள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்ததில் உறுதியாக இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன். சீமானுக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என கூறிய திமுக இனி எவ்வாறு தேர்தலின் போது வாக்கு கேட்கும்?
அதிமுகவின் வலிமையை பயன்படுத்திதான் பாஜக வெல்ல முடியும். அவ்வாறு இருக்கும் போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருத்தப்படும் விதமாக அண்ணாமலை பேசியது ஏற்புடையது அல்ல. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது போல் காவிரி நீர் தர மறுக்கும் காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என சொல்லும் தைரியம் திமுகவுக்கு இருக்கிறதா என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில், கட்சியின் முன்னோடிகளான ஜெயலலிதா, அண்ணாதுரை, எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைமை அவதூறு கருத்துகளை வெளியிட்டிருந்தது.
இது தொண்டர்களுக்கு கடும் கோபத்தை கொடுத்துள்ளது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த முடிவை அதிமுக, பாஜக இரு தரப்பினரும் வரவேற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
தமிழக பாஜக- அதிமுக இடையே அவ்வப்போது கூட்டணியில் பிரச்சினையும் மோதல் போக்கும் நிலவி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணாமலை ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்து தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளார் முன்னாள் முதல்வர் என ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையைும் அதிமுக மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பாஜக- அதிமுக நிர்வாகிகள் ஆளாளுக்கு ஒன்று பேச இந்த விவகாரம் சற்று தணிந்தது. இந்த நிலையில் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் அண்ணாமலை முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என ஒரு தகவலை கூறி கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!











Click it and Unblock the Notifications