அண்ணி கயல்விழிக்கு நாம் தமிழர் கட்சியில் முதல் பொறுப்பு கொடுத்த அண்ணன் சீமான்.. துள்ளும் தம்பிகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மனைவி கயல்விழி காளிமுத்துவுக்கு கட்சியில் அதிகாரப்பூர்வமாக முதல் முறையாக பொறுப்பு வழங்கி இருப்பதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
திராவிடர் இயக்க மேடைகளில் தீவிர கொள்கை, அரசியல் பிரசாரம் செய்தவர் சீமான். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பேசி வருகிறார். நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக்கினார் சீமான்.

திமுக எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியானது ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவால் வாக்கு சதவீதம் பெற்று வருகிறது. இதனையே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி; அடுத்த ஆட்சியே நாம் தமிழர் கட்சிதான் என பெருமிதத்துடன் பேசி வருகிறார் சீமான். அரசியல் களத்தில் திமுகவை மட்டுமே பிரதானமாக எதிர்ப்பதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.
பொதுச்செயலாளராக கயல்விழி?: நாம் தமிழர் கட்சியினர் திமுகவை விமர்சிக்கும் போது மறக்காமல் வாரிசு அரசியலை முன்வைத்தும் பேசுவர். ஒவ்வொரு மேடையிலும் திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறதாக சீமான் உள்ளிட்டோரும் விமர்சிப்பர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்துவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் மறைவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.

நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் கயல்விழி: மேலும் நாம் தமிழர் கட்சியின் போராட்டங்கள், சட்டசபை தொகுதி அலுவலகங்கள் திறப்பு ஆகியவற்றிலும் கயல்விழி முன்னிறுத்தப்பட்டார். அவரை வைத்து நாம் தமிழர் கட்சியினர் சில நிகழ்வுகள் நடத்த அதுவே அக்கட்சிக்குள் சர்ச்சையாகவும் வெடித்தது. நாம் தமிழர் கட்சியினர் பொதுவெளியிலேயே கயல்விழிக்கு முக்கியத்துவம் தருவதை விமர்சிக்கவும் செய்தனர்.
கயல்விழி சீமானுக்கு பொறுப்பு: இந்த பின்னணியில் தற்போது லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் பெயர்கள், செல்பேசி எண்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை நிலையம் தொடங்கி ஒவ்வொரு தொகுதி வாரிய சட்ட ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்து பெயரும் இடம் பெற்றுள்ளது. தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு ராஜன் செல்வராஜ், புருசோத்தமன் ஆகியோருடன் கயல்விழி காளிமுத்துவும் சட்ட ஆலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் கயல்விழி காளிமுத்துவின் செல்போன் எண் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல விமர்சனங்கள்: நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ முதல் பதவி இது என்பது அக்கட்சியின் தம்பிகளை கொண்டாட வைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் "அண்ணியார் சட்டம் பாஸ் செய்து ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை, அவங்க எந்த வக்கீல் கிட்ட ஜூனியரா இருந்தாங்க என்றும் தெரியவில்லை ஆனால் அதுக்குள்ள சட்ட ஆலோசகர் பதவி கொடுத்திருக்கிறார்? இதுக்கு பேர் குடும்ப அரசியல் இல்லையா?" என நாம் தமிழர் எதிர்ப்பாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கயல்விழிக்கான நாம் தமிழர் கட்சி பொறுப்பு விவாதப் பொருளாகி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications