2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி- நானும் போட்டியிடுவேன்: சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் தாமும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Seeman will contest alone in TN Assembly elections

அந்தி வந்தால் நிலவு வரும். அதேபோல் இந்தி வந்தால் பிளவு வந்தே தீரும். இப்போது இந்தியை இந்திய கூட்டாட்சி அமைப்புக்குள் திணிக்கவே முயற்சிக்கிறார்கள். இது நிச்சயம் பேராபத்தானது.

இன்று இந்தி மொழியை படிக்க வேண்டும் என்கிறார்களே.. நாடு முழுவதும் தமிழ் மொழியையும் படிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பார்களா? 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.

நானும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு சீமான் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+