ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன.
கடந்த தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டிருந்த சீமான், இந்த முறை காரைக்குடி தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

சீமானின் சொத்து மதிப்பு
சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னிடம் ரூ.39.8 லட்சம் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ.5 லட்சம் அளவுக்கு கடன் இருப்பதாகவும், சொந்தமாக வீடு இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவரது மனைவி கயல்விழி பெயரில் ரூ.3.44 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தவிர கையில் ரொக்கமாக ரூ. 50,000 இருப்பதாகவும், நகையாக 150 கிராம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
எங்கயோ இடிக்குதே!
இதுவரை பிரச்சனை இல்லை. ஆனால், மனைவி பெயரில் 25.45 ஏக்கரில் நிலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.50.9 லட்சத்தில் வாங்கப்பட்டிருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், ஒரு சதுர அடி நிலம் வெறும் ரூ.4.59க்கு வாங்கப்பட்டதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இவ்வளவு குறைவான விலையில் எங்கு நிலம் விற்பனை செய்யப்படுகிறது? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சீமான் மீதான வழக்கு விவரம்
மறுபுறம் சீமான் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. சீமான் தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தின் தகவல்படி, அவர் மீது 90க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அவதூறு பேச்சுக்கள், அரசியல் போராட்டங்கள் மற்றும் அனுமதியின்றி பேரணி நடத்தியது போன்றவையாகும்.
குறிப்பாக பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications