Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியாரை இழிவுபடுத்தும் சீமான் வீடு ஜன.20-ல் முற்றுகை- 'கோமியம்' பார்சல்- திருமுருகன் காந்தி அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 20-ந் தேதி நடைபெறும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார். மேலும் சங்கி என்றால் நண்பன் என்று கூறியதால் சீமானுக்கு 'கோமியம்' பார்சல் அனுப்பி வைக்கப்படும் என்றும் திருமுருகன் காந்தி அதிரடியாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் இயக்கங்கள் மூலம் அரசியல் அடையாளம் பெற்றவர். நாம் தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சி தொடங்கிய போது கூட தந்தை பெரியாரை போற்றிப் புகழ்ந்தவர்.

periyar seeman thirumurugan gandhi

அண்மைக்காலமாக தந்தை பெரியாரை மிகவும் இழிவுபடுத்திப் பேசி வருகிறார். தந்தை பெரியார் பேசாதவற்றை எல்லாம் பேசியதாக பொது மேடைகளில் கூறி வருவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பெரியார் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், சீமானுக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

கோவை ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம், சீமான் வீட்டை முற்றுகையிட்டு பெரியார் பேசியதற்கு ஆதாரம் கேட்டது. இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கூறுகையில், சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சனையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை சனவரி 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது! தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும்! நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய 'தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என தெரிவித்திருந்தார்.

திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தமிழ்நாட்டை ஏன் பெரியார் மண் என்கிறோம் என சில மண்ணாந்தகைகளுக்கு புரிவதில்லை. பெரியாரின் கொள்கைகளே தமிழ்நாட்டை இன்று வழிநடத்துவதால் பெரியார் மண் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம் என்றார்.

மேலும் சீமான் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. சீமானுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்துத்துவ சங்கிகளுக்கு ஆதரவாக பெரியாரை அவதூறு செய்யும் சீமானின் வீடு ஜனவரி 20ம் தேதிக்கு பின்பு முற்றுகையிடப்படும். மேலும் ஆர்.எஸ்.எஸ்சின் நண்பராக மாறியதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சீமானுக்கு சங்கிகளின் தேசிய பானமான 'கோமியம்' அனுப்பி வைக்கப்படும். (அவரது அனுபவத்தில், அவருக்கு பிடித்தமான 'கோமிய Flavor' என ஏதேனும் இருந்தால் சீமான் தெரியப்படுத்தலாம்).
தோழமை அமைப்புகள் இணைந்து இவற்றை செவ்வனே செய்து முடிப்பார்கள் என அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+