சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பு எங்கே நடந்தது.. எதை பத்தியும் கவலையே படாத சீமான்.. ஆன்லைனில் செம பிஸி.. தம்பிகள் குஷி

சீமான் அறிவுறுத்தியபடி, தொற்று தடுப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சியினர் இறங்கிஉள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: சீமான் குரலை கேட்டதுமே, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, களப்பணியில் இறங்கி வருகின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..!

சீமானை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, இதுவரை தனி நபராகவே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.. இதற்கு மிகுந்த மனவலிமை தேவை.. துணிச்சல் தேவை.. இந்த முறையும் அப்படித்தான் இறங்கினார்..!

கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

இந்த முறை தேர்தலில் அவரது 2 வியூகங்கள் பாராட்டத்தக்கது.. ஒன்று ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது.

கணிப்பு

கணிப்பு

மற்றொன்று, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலாவை சீமான் சந்தித்து பேசியது மிக நுட்பமான அரசியலை வெளிப்படுத்தியது.. நேரடியாகவே சசிகலாவை சீமான் சந்தித்து பேசியதால், நாம் தமிழர் கட்சிக்கு முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்று அப்போதே கணிக்கப்பட்டது.. அதுதான் இறுதியிலும் நடந்தது.

 கொரோனா

கொரோனா

தினகரனை ஓரங்கட்டும் அளவுக்கு முன்னேறி உள்ளார் சீமான்.. அனைத்து இடங்களிலும் தோல்வி என்று பொதுப்படையாக சொன்னாலும், சீமானுக்கான அரசியல் கட்டமைப்பு உயர்ந்து வருகிறது.. எனினும், தற்போதைய காலகட்டத்தில் தொற்று தலைதூக்கி வரும்நிலையில், சீமான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஆர்வம் பரவலாக ஏற்பட்டு வருகிறது.

 ஆலோசனை

ஆலோசனை

ஏன் நாம் தோத்து போனோம்? என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? யார் சொதப்பியது? என்பது குறித்தெல்லாம் ஆலோசனையே நடத்தவில்லை... 234 தொகுதிகளிலும் தோல்வி என்றபோதும், அதை பற்றியும் கவலையே படவில்லை சீமான்.. ரிசல்ட் வந்த மறுநாளே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆன்லைன் வழியாக ஆலோசனையில் இறங்கி விட்டாராம்..

 தமிழக அரசு

தமிழக அரசு

இதையடுத்து, அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட 117 ஆண் வேட்பாளர்கள், மற்றும் 117 பெண் வேட்பாளர்களுடன் தனித்தனியாகவும் ஆலோசனை கூட்டங்களை நடத்தினாராம். இப்படியே முழு நேரமும் கட்சி பணியில் தன்னை ஈடுபத்தி கொண்டுள்ளார். அவ்வப்போது, முக்கிய பிரச்சனைகள் குறித்து, தமிழக அரசுக்கு அறிக்கைகளையும் விடுத்து வருகிறார்.

 சீமான் தம்பிகள்

சீமான் தம்பிகள்

தந்தையின் இறப்பு ஏற்பட்டுவிடவும், 2 நாள் மட்டும் சொந்த ஊரில் தங்கியிருந்தார்.. மற்றபடி, கட்சியின் கட்டமைப்பு பணிகளிலேயே பிஸியாக இருக்கிறார்... இதற்கு நடுவில், கொரோனா நலத்திட்ட உதவிகளையும், கட்சியினரிடம் சொல்லி முடுக்கிவிட்டுள்ளார்.. இதற்காகவே ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக போன் பண்ணி பேசி கொண்டிருக்கிறாராம்.. சீமான் குரலை கேட்டதுமே, நிர்வாகிகள் வேட்டியை மடித்து களத்தில் குதித்துள்ளனர்.. வழக்கம்போலவே, மக்களிடம் நெருங்கியே இருக்கும் முயற்சிகளிலும் சீமானின் தம்பிகள் இறங்கிவிட்டனர்..!

English summary
Seemans Naam Tamilar Party executives are involved in corona prevention work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X