நீட் இல்லை.. தமிழகத்தில் இனி "சீட்".. மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில்.. கமல்ஹாசன் ஒரே போடு
சென்னை: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் (SEET) என்ற பெயரில் தமிழக பாடத்திட்டத்திலிருந்து தேர்வு நடைபெறும் என்று கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதையடுத்து, கோவை தெற்கு தொகுதியில், கமல்ஹாசன் போட்டியிடுகிறார். பிற வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர்.

தேர்தல் வாக்குறுதி
இதையடுத்து இன்று கோவையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மதியம் 12 மணியளவில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகிறார் கமல் ஹாசன். முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதி தொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஏழைகளுக்கு பாதிப்பு
இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் என்பது மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வுக்கு இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெறுகிறது அல்லவா.. அந்த தேர்வுக்கு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் பாஸ் செய்ய முடியவில்லை.. இதனால் ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சீட் தேர்வு
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து, எம்பிபிஎஸ் படிப்புக்கு SEET என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி, உயர் கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ் நாட்டை உருவாக்க என்ற தலைப்பின் கீழ் சில திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார். மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வே கூடாது என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கையாகும். நீட் தேர்வு நீக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications