Sekar babu: எதிர்க்கட்சிகள் அரண்டு போகப்போகுது.. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்.. அமைச்சர் சேகர்பாபு அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டுபோகும் அளவுக்கு அறிவிப்புகள் இடம்பெற உள்ளன என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் முதல்வர் படைப்பக பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழக அரசு தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டுபோகும் அளவு அறிவிப்புகள் இடம்பெற உள்ளன. உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கிற அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.

பொய்யில் பிறந்த எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி வாயில் பொய்யைத் தவிர எதுவும் வராது. பொய்யிலே பிறந்து வளர்ந்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியில் இருந்து தற்போது விலகியுள்ள செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணனிடம் கேட்டால் எடப்பாடி பழனிசாமியின் வண்டவாளம் தெரியும். தவெகவினரை ஆட்கள் வைத்து அடித்ததாக ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு, அவர்கள் சொல்வதை அப்படியே பேசக்கூடாது.
பொதுமக்கள், தவெகவினர்
பொதுமக்களுக்கும், தவெகவுக்கும் தான் பிரச்சனை. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும். பிரச்சனையில் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்க பொதுமக்கள். பொதுமக்களுக்கும், தவெகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இது.
தவெக தாக்குதல்
எப்படி பனையூரில் பிரச்சனைகள், மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அதே போன்ற மோதல் தான் இதுவும். திமுகவின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். சென் ஜார்ஜ் கோட்டையில் எங்கள் முதல்வரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தவெகவினர் தாக்கியதில் மகளிர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் படைப்பகம்
பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களா, தவெகவினார என்று விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இதுபோன்ற செயல்களை வைத்து தங்கள் இயக்கத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் 10 முதலமைச்சர் படைப்பகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications