சேகர் ரெட்டி டைரி.. ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்களுக்கு பறந்த நோட்டீஸ்.. வருமான வரித்துறை செக்!
சென்னை: சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிள்ளதாக தகவல்கள் வருகின்றன. 12 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாகவும், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. சேகர் ரெட்டி வீட்டில் இதை தொடர்ந்து தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்டது.
சிபிஐ, அமலாக்கத்துறை நடத்திய தொடர் ரெய்டுகளில் இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரூ.166 கோடி பணம், 179 கிலோ தங்கம் உட்பட ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் கூறப்பட்டது. 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் இதில் கைப்பற்றப்பட்டன.

ரெய்டு மேல் ரெய்டு
இவருக்கு நெருக்கமாக இருந்ததாக தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் கூட அப்போது ரெய்டு நடத்தப்பட்டது. தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் மத்திய அமைப்புகள் இப்படி ரெய்டு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தமிழ்நாடு அரசில் இருந்த தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இவர் நெருக்கமாக இருந்ததாக புகார் வைக்கப்பட்ட நிலையில் இவருக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரித்து வந்தது. இவருக்கு எதிராக பதியப்பட்ட சிபிஐ அமைப்பின் 3 வழக்குகளில் 2 வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இன்னொரு வழக்கிலும் முறைகேட்டுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி சிபிஐ வழக்கை முடித்து வைத்தது.

டைரி
இந்த நிலையில் சேகர் ரெட்டி முறைகேடு பூதம் அடங்கிவிட்டது என்று கருதப்பட்ட நிலையில் அதிமுக தரப்பிற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. சேகர் ரெட்டி வீட்டு ரெய்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் சிவப்பு நிற டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதில் அப்போதைய எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரின் பெயர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்களும் இடம்பெற்றுஇருந்ததாக வருமானவரித்துறை தரப்பு தெரிவித்தது. ஒன்று இவர்களுக்காக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் அல்லது இவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கி இருக்க வேண்டும் என்று அப்போதே புகார் வைக்கப்பட்டது.

நெருக்கம்
இந்த டைரியில் யாருக்கெல்லாம் ஒப்பந்தத்தாராக இருந்த போது சேகர் ரெட்டி பணம் அனுப்பினார் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. சேகர் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அதிமுகவின் தலைவர்கள் பலர் பார்க்கப்பட்டனர். இதைத்தான் தற்போது வருமானவரித்துறை தற்போது கையில் எடுத்துள்ளது. சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நோட்டீஸ்
மொத்தமாக 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டைரியில் இவர்கள் பெயர் இருந்த காரணத்தால் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தவிர்த்து, முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தனபால், தங்கமணி, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், மறைந்த அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வெளியேறி தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவர்களிடம் இந்த டைரி குறித்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications