நொடிந்து போன "சேகர் ரெட்டி".. கல்யாணம் பண்ற நேரத்துல.. மகளோடு எதிர்காலம் இப்படி ஆகலாமா? என்னாச்சு?
சென்னை: சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியலில் 2016- 2017 சமயங்களில் மிக பெரிய பேசு பொருளாக இருந்தவர் சேகர் ரெட்டி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சார்பாக வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
சிபிஐ வழக்கு இதில் முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டியின் இந்த டைரி தமிழ்நாடு அரசியலையே உலுக்கியது. அதாவது இந்த டைரியில் சேகர் ரெட்டி யாருடன் எல்லாம் பணப்பரிவர்த்தனை வைத்துக்கொண்டார். யாருக்கெல்லாம் ஒப்பந்த பணிகளுக்காக பணம் கொடுத்தார், பணம் வாங்கினார் என்ற லிஸ்ட் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களின் துறைகளுக்கு ஏற்றபடி, அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கு ஏற்றபடி பணம் கொடுக்கப்பட்டதாக இந்த டைரியில் விவரங்கள் அடங்கி இருந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. நான்கு வருடமாக சிபிஐ, அமலாக்கத்துறை இதை விசாரித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

லிஸ்ட்
இந்த லிஸ்டை சேகர் ரெட்டியின் பே ரோல் என்று வருமான வரித்துறையினர் கூறுகிறார்கள். அதாவது சேகர் ரெட்டியின் வரவு செலவு லிஸ்டில் இருந்த நபர்களின் விவரங்கள் அடங்கிய டைரி. அதில் ஒவ்வொரு பெயருக்கும் அருகே இவ்வளவு கோடி, இவ்வளவு லட்சம் என்று எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் அதிமுக டாப் மாஜி அமைச்சர்கள் பலருக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தனபால், தங்கமணி, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரம், புதிய தமிழகம் எம்எல்ஏ கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோருக்கு இதில் நோட்டீஸ் சென்றது.

நோட்டீஸ்
இந்த நிலையில்தான் தற்போது சேகர் ரெட்டி தொடர்பான இன்னொரு பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சேகர் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவராக இருக்கிறார். இவரின் மகளுக்கும் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமௌலிக்கும் திருமணம் செய்யப்படுவதாக இருந்தது. இதற்காக நிச்சயமும் செய்யப்பட்டது.

சந்திரமௌலி
சந்திரமௌலிக்கு வயது 27தான் ஆகிறது. இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு இடையில் ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிதான் திருமணத்தை நடத்தி வைப்பதாக இருந்தது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதையடுத்து சந்திரமௌலி அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனது மகளுடன் நிச்சயிக்கப்பட்ட நபருக்கு திடீரென இப்படி மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் சேகர் ரெட்டி மற்றும் அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications