ஆண்டவனே எங்க பக்கம் தான்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை! எடப்பாடியை ஓபிஎஸ் சந்திச்சா போதும்.. மாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டவனே எங்கள் பக்கம்தான். யாராக இருந்தாலும் துணை மாப்பிள்ளையாக வரலாம். ஆனால் மாப்பிள்ளையாக வர முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையமோ அவரை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது. இதனால் தம்மை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Sellur Raju says that OPS can meeet Edappadi Palanisamy for AIADMK unity

இந்த வழக்கில் தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக இல்லை என ஓபிஎஸ் தரப்பில் ஒரு மனுவை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை கொண்டாடினர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அதிமுகவுக்கு ஏற்பட்டிருந்த களங்கங்கள் மாறி தெளிந்த நீரோடையாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக எந்த வித குழப்பமும் இல்லாமல் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட போவதற்காக சிறந்த இந்த வெற்றி இந்த நேரத்தில் கிடைத்திருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.

இந்த வெற்றி என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் தேர்தல் ஆணையம் என்ன சொல்லுமோ என்கிற குழப்பம் இருந்தது. ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஆண்டவனும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். 2056 பொதுக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்வு செய்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதுதானே நியாயமான ஒன்று.

எனவே பிரிந்து சென்றவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் புரட்சி தலைவரின் லட்சியத்தை, திமுக என்ற தீய சக்தியை ஒழித்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். இது திராவிட பூமி. இங்கு தேசிய கட்சிகள் எல்லாம் தனித்து நின்று கோலோச்ச முடியாது. நண்பனாக வரலாம், துணை மாப்பிள்ளையாக வரலாம்.

ஆனால் மாப்பிள்ளையாக வர முடியாது. அதிமுகவில் 3ஆவது தலைமுறை தொடங்கிவிட்டது. படித்தவர்கள் மத்தியில் எடப்பாடியார் மீது பாச பிணைப்பு இருக்கிறது. பள்ளிக்குச் செல்லாமல் பரீட்சை எழுதாமல் பாஸ் செய்ய வைத்த தலைவர். ஏற்கெனவே உத்வேகத்துடன்தான் செயல்பட்டு வருகிறோம். எடப்பாடி பழனிசாமி சில வழிமுறைகளை சொல்லியுள்ளார். அதையெல்லாம் மாவட்டத்தில் கழக நிர்வாகிகளிடமும் கழக தொண்டர்களிடமும் சொல்லி அதை செயல்படுத்த வழிவகை செய்வோம்.

தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம். எங்களை தவிர வேறு யாரும் இல்லை. சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விகளுக்கு முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லையே. மூத்த அண்ணன் ஓபிஎஸ் வழித்தவறி போய்விட்டார். அவர் தனிக்கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது அவரிடம்தான் கேட்க வேண்டும். அப்படியே தொடங்கினாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டு அவரை ஓபிஎஸ் வந்து பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+