காங்கிரஸ் மோதலை தீர்த்த.. ஸ்டாலின் கையிலிருந்த கல்யாண பத்திரிக்கை.. பார்த்ததும் வந்த புன்முறுவல்!
சென்னை: காங்கிரஸ் திமுக இடையில் நிலவும் கடுமையான மோதலுக்கு கிட்டத்தட்ட ஒரு கல்யாண பத்திரிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அது என்ன கல்யாண பத்திரிகை..?
இன்று தமிழ்நாடு சட்டசபையில் திமுக - காங்கிரஸ் இடையில் கிட்டத்தட்ட "ப்ரோமான்ஸ்" நடந்தது என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு தரப்பும் மாறி மாறி அன்பை பொழிந்துகொண்டார்கள்.. இன்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். அதன்படி இத்தனை நாட்களாக காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணி மோதல் கதைக்கு இன்று எண்டு கார்டு போட்டுள்ளார் காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை. சட்டசபையில் இன்று அவர் சொன்ன விஷயம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதன்படி திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சிக்கு வருவது என்பது மக்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது, என்று செல்வப்பெருந்தகை பேசி உள்ளார். அதாவது திமுக ஆட்சிதான் அமையும் என்று கூறிய செல்வப்பெருந்தகை எங்கும் கூட்டணி ஆட்சி என்று கூறாமல் தவிர்த்து உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
அதேபோல் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். அதில், மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும்.
அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு தன்வசம் வைத்துள்ளது. இன்னும் எத்தனை காலம் அவர்கள் கொடுக்கும் இடத்திலும் நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது?.அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்கவேண்டும், என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
அதாவது தமிழ்நாட்டில் கூட்டாட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதை ஸ்டாலின் உறுதியாக கூறி உள்ளார். இந்த பேச்சை கேட்டு சட்டசபைக்கு வெளியே பேசிய செல்வப்பெருந்தகை , மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதை வரவேற்கிறேன்.. திமுகவின் நிலைப்பாடு சரி, என்று குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் திமுக நெருக்கம்
கடந்த சில வாரங்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும், திமுக தரப்பு இதற்கு ஆரம்பத்திலிருந்தே முரண்பட்டு வருகிறது. அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. இந்த நிலையில்தான் இன்று செல்வப்பெருந்தகை சட்டசபையில் பேசியது கிட்டத்தட்ட பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது.
என்ன காரணம்?
காங்கிரஸ் திமுக இடையில் நிலவும் கடுமையான மோதலுக்கு கிட்டத்தட்ட ஒரு கல்யாண பத்திரிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இன்று காலை மகளின் திருமண விழா அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவரிடம் நீண்ட பேசிக்கொண்டு இருந்தார். அழைப்பிதழை வாங்கி சிரித்த ஸ்டாலின்.. நட்பாக செல்வப்பெருந்தகையிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
இதில் அரசியல் தாண்டி நட்பாக பல விஷயங்கள், குடும்பங்கள் தொடர்பாக பல விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக காங்கிரஸ் திமுக இடையிலான கசப்பை போக்கும் விதத்திலும் சில விஷயங்கள் பேசப்பட்டு உள்ளது.. அண்ணே நான் பார்த்துகிறேன்.. தேர்தல் வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை இந்த மீட்டிங் முடியும் போது கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதற்கு பின்பே காங்கிரஸ் - திமுக தரப்பில் ப்ரோமான்ஸ் அதிகரித்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!












Click it and Unblock the Notifications