Selvaraghavan Divorce: செல்வராகவன் மனதை உடைக்கும் செய்தி இதுதானா? விவாகரத்து கோருகிறாரா கீதாஞ்சலி?
சென்னை: இயக்குநர் செல்வராகவனின் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி, இன்ஸ்டாகிராமில் செல்வராகவன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். எனவே தனுஷை தொடர்ந்து செல்வராகவனும் விவாகரத்து செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. 6 மாதத்திற்கு முன்பே செல்வராகவன் கூறிய செய்தி இதுதானா என்ற கேள்வியும் எழுகிறது.

"காதல் கொண்டேன்" படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழில் "7ஜி ரெயின்போ காலனி", "புதுப்பேட்டை", "ஆயிரத்தில் ஒருவன்", "மயக்கம் என்ன" உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
"காதல் கொண்டேன்", "7ஜி ரெயின்போ காலனி" படங்களில் பணியாற்றிய போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டனர்.
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த அடுத்த ஆண்டே கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். இவர் செல்வராகவனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியவர்.
இவர் தமிழக அரசின் அட்டர்னி ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகளாவார். செல்வராகவன்- கீதாஞ்சலிக்கு 3 குழந்தைகள். கீதாஞ்சலி, செல்வராகவனின் "மயக்கம் என்ன" படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கீதாஞ்சலி "மாலை நேரத்து மயக்கம்" படத்தையும் இயக்கியுள்ளார். அதன் பின்னர் அவர் சினிமாவில் பக்கம் செல்லாமல் குடும்பத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது அவர்களை பற்றி விவாகரத்து சர்ச்சை வைரலாகி வருகிறது. கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராமில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்களை நீக்கியுள்ளார். இவர் எதற்காக அந்த புகைப்படங்களை நீக்கினார் என தெரியவில்லை. ஆனால் தனது இன்ஸ்டா ஐடியின் பெயரில் இருந்து செல்வராகவனின் பெயரை நீக்கவில்லை.
செல்வராகவன் தனது இன்ஸ்டாவில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி மனைவியுடன் போட்ட வீடியோவை அப்படியே வைத்திருக்கிறார். கீதாஞ்சலி "ஏதே தோ எண்ணம் வளர்த்தேன்" எனும் பாடலை பாடுகிறார். இதை கேட்ட செல்வராகவன், "என்னை காப்பாற்றுங்கள்" என போட்டிருந்த வீடியோவை நீக்காமல் வைத்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் அளித்த பேட்டியில் "6 மாதத்தில் என்னை உடைத்த செய்தி ஒன்று வெளியே வரும். எத்தனை முறை உடைந்தாலும் எப்படி இத்தனை முறை எழுந்து நிற்க முடிகிறது என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். என் தொழில் மீது கொண்ட காதல் தான் காரணம் என நினைக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். ஒரு வேளை செல்வராகவன் கூறியிருந்த அந்த செய்தி இதுதானா என்ற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications