எப்பேர்பட்ட வரிகள்..ஒன்றைணா உதவி பண்ணிட்டு 1000 கோடிக்கு பேசுவாங்க..செல்வராகவனின் மண்டே மோட்டிவேஷன்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் இப்போது தீர்க்கதரிசி போல மாறிவிட்டார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் மண்டே மோட்டிவேஷன் போல ஏதாவது கருத்து சொல்வது அல்லது வீடியோ வெளியிடுவது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வருகிறார். இந்த நிலையில் இந்த வார அறிவுரையாக, யார்கிட்டயும் உதவி கேக்காதீங்க.. ஒன்றரை அணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சொல்வராகவன். தனது தந்தை இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி, பின்னர் தனது தம்பி தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன் படம் மெகா ஹிட் அடித்தது.

தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகப்போர், மயக்கம் என்ன, என்ஜிகே, நானே வருவேன், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களை இயக்கி இருக்கிறார். சில படங்கள் விமர்சனங்களை பெற்று தோற்றாலும் பிற்காலத்தில் அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.
அதற்கு புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் உதாரணம். தற்போது 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும் இளம் இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் மிகவும் அமைதியான குணம் கொண்ட செல்வராகவன் அதிகம் பேச மாட்டார். அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு சாமியார் போலவே அவரது கருத்துக்கள் இருக்கிறது.
செல்வராகவனின் மண்டே மோட்டிவேஷன் என சமூக வலைதளங்களில் அதற்கும் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் தான் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் அதில் யாரிடமும் உதவி கேட்காதீங்க என அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதில் பேசியுள்ள செல்வராகவன்,"இப்போ நீங்க ஒரு விஷயம் பண்ண போறீங்க ஒரு லட்சியத்தை அடைய தயாராகிட்டு இருக்கீங்க.. பிரப்பரேசன்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க.. அது ரொம்ப நல்ல விஷயம் தான். ஆனால் அந்த விஷயத்தை ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுட்டு இருக்கீங்க..
நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? என்ன செய்யப் போறேன் தெரியுமா? அப்படின்னு எல்லார்கிட்டயும் சொல்லி இருந்தீங்கன்னா கடைசில அந்த காரியம் விளங்காம போயிரும். நீங்க ஒரு விஷயத்தை சொல்லி அதை கேட்டு அவங்க சந்தோஷப்படுவாங்கன்னு நினைக்கிறீங்களா? இந்த உலகத்தில் யாருமே எதுக்காகவும் மத்தவங்களோட வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்பட மாட்டாங்க. ரொம்ப அமைதியா இருங்க.. அமைதியா வேலை பாருங்க.. அமைதியா போங்க.. அமைதியா வாங்க.. இங்க வேலை செய்றது யாருக்குமே தெரியக்கூடாது. உங்க வீட்ல இருக்கவங்ககிட்ட கூட சொல்லாதீங்க..
அது மட்டும் இல்லாம யார்கிட்டயும் உதவி கேட்காதீங்க.. நீங்க ஒருத்தர்கிட்ட சின்ன உதவி தான் கேட்டிருப்பீங்க.. ஆனா அந்த உதவியை அவங்க செஞ்சுடுவாங்க.. ஆனா உங்க ஆயுசு முழுக்க சொல்லி சொல்லி, என்னால தான் அவன் இந்த அளவுக்கு பெரிய ஆளா வந்தான். அப்படின்னு சொல்லுவாங்க.. நான் தான் அவனுக்கு அந்த உதவியை செஞ்சேன்னு சொல்லிட்டே இருப்பாங்க. ஒன்றைணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு உதவி செஞ்ச மாதிரி பேசுவாங்க" என பேசியிருக்கிறார். உண்மையில் செல்வராகவன் பேசியிருப்பது மிகச் சரியானது என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications