செம்ம.. செம்ம.. தமிழகத்திற்கு மிக சிறந்த நாள்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. என்ன சொல்கிறார்?!

தமிழகம் முழுக்க காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Moderate rain likely in parts of south Tamil Nadu | 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    சென்னை: தமிழகம் முழுக்க காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    இந்திய பெருங்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது கன்னியாகுமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

    இதனால் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெய்ய இருக்கும் மழை குறித்து தற்போது தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.

    தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்

    தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்

    தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்ட்டில், செம்ம செம்ம செம்ம காற்று அழுத்தம் உருவாகி உள்ளது. தமிழகம் முழுக்க இன்று மொத்தமாக கனமழை பெய்ய போகிறது. மிக சிறந்த நாளாக இருக்க போகிறது. காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மாணவர்களே சாரி, என் கையில் எதுவும் இல்லை (அவர்களுக்கு விடுமுறை விடப்படவில்லை).

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழை பெய்யும். பூண்டி ஏரி இருக்கும் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை ஏரிகளுக்கு அதிகமாக தண்ணீர் வரப்போகிறது. அதேபோல் நெல்லையிலும் பாபநாசத்திற்கு மழையால் தண்ணீர் வரப்போகிறது.

    அதிகம்

    அதிகம்

    தமிழகத்தில் அதிகமாக திருநெல்வேலியில் கீழ் பாபநாசத்தில் 249 மிமீ மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 141 மிமீ மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு பகுதிகளில் 137 மிமீ மழை பெய்துள்ளது. நெல்லை முழுக்கவே நல்ல மழை பெய்து இருக்கிறது.

    எவ்வளவு மழை

    எவ்வளவு மழை

    அதேபோல் தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் பகுதியில் 119 மிமீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் கலசப்பக்கத்தில் அதிகமாக 143 மிமீ மழை பெய்துள்ளது. வேலூர் சோளிங்கூரில் 138 மிமீ மழை பெய்துள்ளது. பூண்டி லேக் பகுதியில் 64 மிமீ, தாம்பரத்தில் 62 மிமீ மழை பெய்துள்ளது, என்றுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+