“செங்கோட்டையன் துரோகி”.. அதிமுகவில் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: "அதிமுகவில் உள்ள இரண்டரை கோடி தொண்டர்களுக்குச் செங்கோட்டையன் துரோகம் செய்துள்ளார். இரட்டை இலையின் வாக்கு, தொண்டர்களின் விசுவாசம், சொந்த பந்தங்களின் பலம் ஆகிய மூன்றை வைத்துத்தான் செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்" என இன்று அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன் கே.கே.செல்வன் கூறியுள்ளார்.
அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்து அக்கட்சியில் உயர் மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவிகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கே.கே. செல்வன் அதிமுகவில் இருந்து விலகி 2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
அங்கு அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அண்மையில் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கே.கே.செல்வனுடன் அவரது ஆதரவாளர்களும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.கே.செல்வன், "1972 முதல் அரசியலில் 53 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக எனது தந்தை காளியப்பன் செயல்பட்டு வந்தார் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இரண்டரை கோடி தொண்டர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது தவெகவில் ஐக்கியமாகி அங்கிருந்து பல குற்றச்சாட்டுகளை எடப்பாடியார் மீது செங்கோட்டையன் கூறி வருகிறார். அவை அனைத்தும் தவறானவை.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக எங்கள் குடும்பம் இருந்து வந்திருக்கிறது. நாங்கள் இல்லாவிட்டால் 2016 தேர்தலில் எங்கள் சித்தப்பா செங்கோட்டையன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். 2006 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். நாங்களும் தொண்டர்களும் உழைத்ததாலேயே கோபிச்செட்டிபாளையத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதைக் கைவிட வேண்டும்.
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் மிக அதிகமாக இருக்கிறது. திமுக தொண்டர்களுக்காக கூட ஒரு காரியத்தை திமுக மாவட்டச் செயலாளரால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. கோபாலபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள சி.எல்.ஜெயின் மேத்தா கல்லூரி மற்றும் ஓ.எம்.ஆரில் உள்ள சிஷ்யா பள்ளிக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வளைத்துப்போட முதல்வர் குடும்பத்தினரின் பெயரையும், முதல்வரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.
திமுக ஆட்சியில் அக்கட்சியின் தொண்டர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. எனவே வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் குள்ளம்பாளையம் கிராமம், கோபி தொகுதியைச் சேர்ந்த மக்கள் எங்கள் மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் முன்னிலையில் இன்றைய தினம் வருங்கால முதல்வருடன் இணைந்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு ஈரோட்டில் அதிமுகவுக்கு பாதிப்பு என்கிறார்களே.. உண்மையான நிலவரம் என்ன? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.கே.செல்வன், "2026 தேர்தலில் யாரை வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும் அவரே அங்கு வெற்றி பெறுவார்" எனத் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஏன் திமுகவுக்கு போனீர்கள். இப்போது அங்கிருந்து ஏன் விலகுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, "நான் பிறந்ததில் இருந்து அதிமுக குடும்பத்தில் வளர்ந்தவன். செங்கோட்டையனுடன் நாங்கள் 1996 வரை கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தோம். 2019-ல் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர் செய்த சில வேலைகள் காரணமாக நான் அதிமுகவில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
மீண்டும் அவர் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டு தவெகவுக்கு சென்றதை எங்கள் குடும்ப உறுப்பினர்களாலும், கோபி தொகுதி மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நாங்கள் மீண்டும் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேர்ந்திருக்கிறோம்.
அவருக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன் என்பதே உண்மை. மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்துள்ளோம். எனக்கு தெரிந்து கோபியில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செங்கோட்டையனால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் 5,000 பேருக்கு மேற்பட்டவர்கள் செங்கோட்டையனால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications