Sengottaiyan: தவெகவில் இணைகிறீர்களானு கேட்ட நிருபர்! ஒரு நாள் பொறுங்களேன்னு சொன்ன செங்கோட்டையன்!
சென்னை: தவெகவில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதனால் அவர் நாளை தவெகவில் இணைவது மறைமுகமாக சொல்லியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் கடந்த செப்டம்பர் மாதம் அவரது கட்சி பதவிகள் பறிப்புக்குள்ளானார். இந்த நிலையில் பசும்பொன்னில் கடந்த மாதம் இறுதியில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அத்துடன் ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன்னிற்கு செங்கோட்டையன் சென்றார். அத்துடன் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மேலும் சசிகலாவுடனும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார்.
கட்சி பதவி பறித்ததற்கு செங்கோட்டையனிடம் சசிகலா வேதனை தெரிவித்த போது கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என செங்கோட்டையன் கூறியிருந்தாராம். இந்த நிலையில் அடுத்த நாளே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரை திமுகவின் பி டீம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது, எடப்பாடி பழனிசாமியே தற்காலிக பொதுச் செயலாளர் என்ற நிலையில் உள்ளார். தான் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன், எப்படியும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. இது பொய்யாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தவெகவில் இணைகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்த மறுப்பையும் சொல்லவில்லை.
அது போல் ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும் இந்த கேள்விக்கு மறுக்காமல் மழுப்பினர். இந்த நிலையில் ஈரோடு குள்ளம்பாளையம் வீட்டிலிருந்து செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்திருந்தார். அவர் சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் சொல்லப்பட்டது.
அவர் இன்று ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சபாநாயகரை பார்க்க சென்ற செங்கோட்டையன் திடீரென வீடு திரும்பினார். பின்னர் ஓரிரு மணி நேரம் கழித்து சபாநாயகரை , தலைமைச் செயலகத்தில் போய் சந்தித்தார். அங்கு அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, செங்கோட்டையனிடம், செய்தியாளர்கள், "தவெகவில் இணைகிறீர்களா" என்ற கேள்விக்கு "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என கூறிவிட்டுச் சென்றார். எனவே நாளை செங்கோட்டையன் எந்த கட்சியில் இணைய போகிறார் என்பது தெரியவரும்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!











Click it and Unblock the Notifications