செங்கோட்டையன் வீட்டில் குவிந்த சட்ட நிபுணர்கள்.. திடீர் ஆலோசனை! எடப்பாடிக்கு எதிரான ஆக்ஷனுக்கு ரெடி
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தமது வீட்டி, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் செங்கோட்டையன்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

இநிந்லையில், அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், "1972-ல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து கட்சியில் நிர்வாகியாக இருந்துள்னேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி 1989-இல்தான் கட்சிக்கு வந்தார். கட்சிக்காக 53 ஆண்டுகள் பல்வேறு வகைகளில் பாடுபட்டவன் நான்.
தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன்னுக்கு கடந்த 30-ஆம் தேதி சென்றிருந்தேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்தேன்.
ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலே கட்சியில் இருந்து நீக்கியது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தொடர்ந்து கட்சியில் இயங்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவில் இருந்து நீக்கியது கட்சி விதிகளின்படி செல்லாது. அதற்கு எதிராக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வழக்குத் தொடுப்பேன்." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில், செங்கோட்டையன் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது, கட்சி விதிகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து ஆலோசனை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து விரிவாகப் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications