ஈரோட்டில் மக்களை சந்திக்கும் விஜய்.. ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி பழனிசாமி.. தட்டித்தூக்கிய செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணையவுள்ள நிலையில், விரைவில் ஈரோடு மாவட்டத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு பிரச்சாரப் பயணத்தை வடிவமைத்த செங்கோட்டையன், தற்போது விஜய்க்கு அந்த பணிகளை செய்து கொடுக்க தயாராகி இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாளை தவெகவில் இணைய உள்ளார். ஏற்கனவே இன்று காலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலையில் விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருந்தார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Sengottaiyan in TVK

நாளை காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளார். செங்கோட்டையனுக்கு அமைப்புச் செயலாளர் மற்றும் நிர்வாகிக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளது. இதனால் செங்கோட்டையனுக்கு புஸ்ஸி ஆனந்த்-க்கு நிகரான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையன் இணைப்பை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை விஜய் நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக பெரியாரின் மண்ணான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த செங்கோட்டையன் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதனை விஜய்யும் ஏற்று, அதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை 2ஆம் கட்டத்தை நவம்பர் 30ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அதன்பின் விஜய் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை உள்ளரங்கில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு பிரச்சார பயணத் திட்டத்தை வகுத்து கொடுத்தவர் செங்கோட்டையன் தான். தற்போது மீண்டும் செங்கோட்டையன் விஜய்க்காக அதே பணிகளை செய்வதோடு, தவெகவில் மிக முக்கிய பொறுப்பை அடைந்திருப்பது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய்யின் முக்கிய ஆலோசகராகவும் செங்கோட்டையன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+