Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டினம்பாக்கம் இல்லத்தில் விஜய்யை சந்தித்த செங்கோட்டையன்! தவெகவில் இணைப்பு 200 சதவீதம் உறுதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யை சந்தித்து பேசி வருகிறார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் தவெகவில் அவர் இணைவது என்பது 200 சதவீதம் உறுதியானதாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்றைய தினம் தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

sengottaiyan vijay

செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக கடந்த 2 தினங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் அதற்கு அச்சாரமாக அவர் இன்று ராஜினாமாவும் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் மதியம் 1.30 மணிக்கு சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு விஜய் சென்றுள்ளார். தற்போது சில நிமிடங்களுக்கு முன்பு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சென்றுள்ளனர். விஜய் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பட்டினம்பாக்கம் வீட்டிற்கு செங்கோட்டையன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே தவெகவில் செங்கோட்டையன் இணைப்பு என்பது 200 சதவீதம் உறுதியாகவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

செங்கோட்டையனுக்கு என்ன பதவி கொடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி திடீர் ட்விஸ்ட்டாக இருக்கிறது.

எப்படியாவது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக மாறுவதற்காகவே செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையன் திமுகவுக்கு செல்வது சந்தேகம்தான் என்கிறார்கள்.

ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, செங்கோட்டையன் தனது அரசியல் அனுபவத்தை திமுகவில் காட்ட வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்து அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் பதவியையும் பார்த்து அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள பலரும் தவெகவில் இணைவார்கள் என மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறுவது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அது போல் செங்கோட்டையன் விவகாரம் குறித்து விசிக எம்பி ரவிக்குமார் கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேரப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து அதிமுகவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என அறிக்கைவிட்டார். எனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பிறகு அமித்ஷா தான் என்னை பேச சொன்னார் என கருத்து தெரிவித்திருந்தார். அதே போல் வரும் காலத்தில் தன்னை அமித்ஷா தான் தவெகவில் சேர சொன்னார் என்பதையும் வெளிப்படையாக கூறுவார்.

பாஜகவின் நாடகம் ஒவ்வொன்றாக தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. பாஜகவின் முதன்மையான நோக்கம் அதிமுகவை ஒழிப்பது. தவெக உருவான காலத்தில் இருந்து பாஜகவின் கிளை அமைப்பு என்றும் பாஜக கூறிதான் இந்த கட்சியை விஜய் உருவாக்கியுள்ளார் என்பதையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி வருகிறது. அது இன்றைக்கு நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் ஒரு கிளை அமைப்புதான் விஜய் நடத்துகிற கட்சி. சனாதன சக்திகளின் சதி வேலை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+