எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு நோ! ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் செங்கோட்டையன் "ஆஜர்"
சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சிக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) என ஒன்று உள்ளது. இதில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தொகுதிகள் வாரியாக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

எனவே இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இந்த மாநில வளர்ச்சி குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொல் திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் மாநில வளர்ச்சி குழுவில் உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையனும் இதில் கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதல்வர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை இரட்டை கொலை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த குழுவில் எம்எல்ஏக்கள் எழிலன், நீலமேகம், பூமிநாதன் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
அத்திக்கடவு அவினாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம் பெறவில்லை என அதிருப்தி தெரிவித்த செங்கோட்டையன் அவர் மாவட்டத்தில் நடந்த விழாவையே புறக்கணித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன் டெல்லியில் அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு விழாவிலும் மூத்த தலைவர் என்ற முறையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில், நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆளுயர படங்கள் இடம்பெற்றிருந்தன. அது போல் எடப்பாடி பழனிசாமி படத்தை போல ஒரே அளவில் செங்கோட்டையனின் படம் இடம் பெற்றிருந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications