"கலங்காதீங்கம்மா! அதிமுகவிலிருந்தே நீக்கினாலும் மகிழ்ச்சிதான்" சசிகலாவிடம் செங்கோட்டையன் சொன்னாரா?

அதிமுகவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்திலேயே எம்எல்ஏவாக இருந்தவர் செங்கோட்டையன். இவர் அவ்வப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெறுவதும், பின்னர் அவரால் ஒதுக்கி வைப்பதுமாக இருந்தார்.
இது போல் ஜெயலலிதா மீது பலர் அதிருப்தி அடைந்து திமுகவில் இணைந்தாலும் இன்று வரை அதிமுகவில் இருப்பவர் செங்கோட்டையன். இவர் சசிகலாவின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவால் மீண்டும் லைம் லைட்டுக் கொண்டு வரப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிரிந்த போது எடப்பாடி பழனிசாமி அணியில் கடைசி வரை இருந்தார்.
ஆனால் அண்மைக்காலமாக எடப்பாடி பழனிசாமி, தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்றும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பிரதானப்படுத்த தவறிவிட்டார் என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அவர் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவரை பாஜக இயக்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கேற்ப அவரும் டெல்லி பாஜக தலைமைகளை சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுகிறேன் என செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்களை எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைக்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என கூறிய அவர் 10 நாட்களில் இந்த செயலுக்கு எடப்பாடி பழனிசாமி முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
உடனே பொதுச் செயலாளருக்கே கெடுவா என விமர்சனம் எழுந்தது. அடுத்த நாளே செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. செங்கோட்டையனின் பிரஸ்மீட்டை சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
10 நாட்கள் கெடு முடிந்த நிலையிலும் ஒன்றிணைந்த அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி, ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை. இதனால் செங்கோட்டையன் என்ன செய்வார் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் செங்கோட்டையன் அத்துடன் ஆஃப் ஆகிவிட்டார்.
இதனால் அவர் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக சென்றுவிட்டார் என சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த மதுரை வந்த செங்கோட்டையன், ஹோட்டலில் தங்கியிருந்த ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசிவிட்டு இருவரும் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இருவரும் ஒரே காரில் பயணித்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போல் சசிகலா, டிடிவி தினகரனையும் அவர் சந்தித்து பேசியிருந்தார். சசிகலாவிடம் செங்கோட்டையன் பேசும் போது அவரை பதவியில் இருந்து நீக்கியது குறித்து வருத்தப்பட்டாராம்.
அதற்கு செங்கோட்டையனோ, "அதெல்லாம் வருந்தாதீங்கம்மா, அதிமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் மகிழ்ச்சி அடைவேன். அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் அடுத்த கட்ட நடவடிக்கையை தெரிவிப்பேன் என தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications