நோ முதல்வர் வேட்பாளர்! கைகோர்க்கும் விஜய் + செங்கோட்டையன்.. எடப்பாடியின் மிகப்பெரிய கனவு கலைகிறது!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. செங்கோட்டையன் தவெக செல்வதால் அதிமுகவிற்கு கடுமையான சில நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
1. அதிமுக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கான ஆசையை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

2. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
3. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக மக்கள் மத்தியில் கூட்டணி பற்றி வெளிப்படையாக பேசினார் எடப்பாடி பழனிசாமி.
4. ஆனால் விஜய் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று எங்குமே விஜய் பேசவில்லை.
5. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. செங்கோட்டையனுக்கு அங்கே வலிமையான பதவி கொடுக்கப்படும் என்கிறார்கள்.
6. அதாவது அமைப்பு செயலாளர் போன்ற பதவி அதே சமயம் முடிவு எடுக்கும் அதிகாரம் அதிகம் உள்ள பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படி செங்கோட்டையன் தவெக செல்வதால் அதிமுகவிற்கு கடுமையான சில நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
7. செங்கோட்டையனுக்கு கட்சியில் அதிக பவர் இருக்கும் என்பதால்.. அவர் அதிமுக கூட்டணி உருவாகாமல் பார்த்துக்கொள்வார். அதாவது அதிமுக - தவெக கூட்டணி உருவாகி அது வென்றால், அது எடப்பாடிக்குத்தான் சாதகம். அதை செங்கோட்டையன் விரும்ப மாட்டார்.
8. எனவே இந்த கூட்டணிக்கு தவெக உள்ளே இருந்தே செங்கோட்டையன் முட்டுக்கட்டை போடுவார்.
9. ஒருவேளை கூட்டணி உருவாகிறது என்றாலும்.. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக இருக்க அனுமதிக்க மாட்டார். தவெக வழியாக இதற்கு எதிராக பிரஷர் போடுவார். ஏனென்றால் இப்போதே NDA கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் ஆக இருப்பதை செங்கோட்டையன் விரும்பவில்லை. இதனால் தவெகவில் தனக்கு கிடைக்கும் பவரை வைத்து எடப்பாடி ஆசைக்கும் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைப்பார்.
10. இப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் சென்று இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது. தவெக உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டு உள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications